அமாவாசை அன்று வீட்டின் முன் கோலம் போடக்கூடாது என்பது இதற்கு தானா? இறந்தவர்களை நாமே வீட்டுக்கு அழைக்கிறோமா?

- Advertisement -

பொதுவாக அமாவாசை என்பது பித்ரு காரியங்களுக்கான ஒரு முக்கியமான நாள். அன்று பித்ரு காரியம் மட்டுமே நாம் செய்ய வேண்டும். மங்கள காரியங்கள் எதுவாக இருந்தாலும் பித்ரு காரியத்திற்கு பிறகு செய்ய வேண்டும். நம் வீட்டில் இறந்து போன முன்னோர்களின் திதியை நம்மால் மொத்தமாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு படைக்க முடியாது என்பதால் இந்த அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைத்து நாம் தர்ப்பணம் கொடுக்கின்றோம். அதனால் நம் வீட்டில் வேறு என்ன பண்டிகைகள் விசேஷங்கள் வந்தாலும் முதலில் பித்து கடனை முடித்த பிறகு தான் அந்த பண்டிகைகளையும் விசேஷங்களையும் நாம் கொண்டாட வேண்டும். அந்த நாள் அன்று நம் வீட்டில் கோலம் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும் அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

-விளம்பரம்-

கோலம் தெய்வங்களுக்கு உண்டானது

வீட்டின் முன்பு கோலம் இடுவது என்பது மங்களமான ஒரு விஷயமாகும். வீட்டின் முன்பு நாம் கோலம் இடுவது தெய்வங்களை வரவேற்பதற்கான ஒரு தளம். எப்பொழுதுமே தெய்வங்கள் காலடியில் கமல பீடம் இருக்கும் அதில் தான் அனைத்து தெய்வங்களும் அமர்ந்திருப்பார்கள். நம் வீட்டின் முன்பு போடப்படும் கோலமும் அது மாதிரி தான். அது தெய்வங்கள் நம் வீட்டிற்குள் வருவதற்கான ஒரு மங்கள வரவேற்பு.

- Advertisement -

இது தான் உண்மை காரணம்

எனவே அமாவாசை அன்று நம் வீட்டின் முன் கோலம் இட்டால் அது தெய்வங்களுக்கான களம் என்று நினைத்துக் கொண்டு முன்னோர்கள் நம் வீட்டிற்குள் வராமல் சென்று விடுவார்கள். எனவே அமாவாசை அன்று நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் மட்டுமே கொடுக்க வேண்டும். கோலம் போடக்கூடாது. அப்படி கோலம் போட்டால் நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம் முன்னோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போக நேரிடும். நம் வீட்டில் ஏதாவது பூஜை செய்வதாக இருந்தால் கூட முதலில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகே பூஜை செய்ய வேண்டும்.


நம் வீட்டின் முன்பு அமாவாசை அன்று கோலம் எதுவும் போடாமல் காவி மட்டும் வேண்டுமானால் பூசி விடலாம். ஆனால் அந்த காவியிலும் நாம் கோலம் போடக்கூடாது. அமாவாசை என்று எதற்காக நம் வீட்டின் முன்பு கோலம் போடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து இருப்போம் நீங்களும் உங்கள் வீட்டில் அதேபோல் கோலம் போடாமல் பித்ரு கடனை முடித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ருக்களின் ஆசிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.