- Advertisement -
பெண்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சமையல் வேலைகளை சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். சட்டென்று ஏதாவது செய்து கொடுத்து அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாகவே இருக்கும். ஒரே ஒரு நிமிடம் போதும் சூப்பரான ஒரு ஆந்திரா கார தோசை தயார் செய்து விடலாம்.
-விளம்பரம்-
ஒரே மாதிரியான தோசை செய்வதை விட விதவிதமான தோசை செய்து சாப்பிடும் பொழுது நமக்கு அந்த நாள் தொடக்கம் இனியதாக இருக்கும். அது போல காரசாரமான இந்த கார தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி கூட தேவையில்லை. ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த எளிமையான ஆந்திரா கார தோசை எப்படி நம் கையால் வீட்டிலேயே தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
- Advertisement -
ஆந்திரா கார தோசை | Andhra Kara Dosai Recipe In Tamil
ஒரே மாதிரியான தோசை செய்வதை விட விதவிதமான தோசை செய்து சாப்பிடும் பொழுது நமக்கு அந்த நாள் தொடக்கம்இனியதாக இருக்கும். அது போல காரசாரமான இந்த கார தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி கூடதேவையில்லை. ஒரே ஒரு நிமிடம்போதும் சூப்பரான ஒரு ஆந்திரா கார தோசை தயார் செய்து விடலாம். ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த எளிமையான ஆந்திரா கார தோசை எப்படி நம்கையால் வீட்டிலேயே தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள இருக்கிறீர்கள்.
Yield: 4
Calories: 879kcal
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 10 வரமிளகாய்
- 1 முழுபூண்டு
- உப்பு சிறிதளவு
- எண்ணெய் தேவைக்கு
- 1 முட்டை
- 1 கப் தோசைமாவு
செய்முறை
- கொதிக்கும் நீரில் வரமிளகாயை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பூண்டுகளைஉரித்து வைக்கவும்.
- பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் தோசைகல்லில் தோசையை வார்க்கவும்.
- அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சமமாக எல்லா இடங்களிலும் பரப்பவும்.
- அரைப்பதமாக வெந்ததும் கார சட்னி 2 தேக்கரண்டி சேர்த்து எல்லா இடங்களிலும் சமமாக பரப்பவும்.
- இரு பக்கமும் வேகவிட்டு மடித்து பரிமாறவும்.
Nutrition
Serving: 640g | Calories: 879kcal | Carbohydrates: 36g | Sodium: 354mg | Potassium: 264mg | Calcium: 34mg