ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!

- Advertisement -

ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என அழைக்கப்படும் புளிச்ச கீரை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். மிகவும் சுவையாக இருக்கும் இதன் இலைகளை சிலர் சும்மாவே உண்பார்கள். மேலும் இவற்றில் தயார் செய்யப்படும் சட்னி மற்றும் தொக்கை சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொண்டால் சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.

-விளம்பரம்-

ஒரு சிலர் உணவின் மீது மிகவும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அதாவது பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது ஆந்திர ஸ்டைல் உணவுமுறை தான். இந்த பச்சடி சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும். நாம் வழக்கமாக செய்யும் பச்சடி மற்றும் சட்னி ஆகியவற்றின் சுவையில் இருந்து இந்த கோங்குரா பச்சடியின் சுவை வேறுபட்டு இருக்கும். இந்த துவயலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது. இந்த பச்சடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

- Advertisement -
Print
5 from 1 vote

ஆந்திரா கோங்குரா பச்சடி | Andhra Kongura Pachadi Recipe In Tamil

ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என அழைக்கப்படும் புளிச்ச கீரை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். மிகவும் சுவையாக இருக்கும் இதன் இலைகளை சிலர் சும்மாவே உண்பார்கள். மேலும் இவற்றில் தயார் செய்யப்படும் சட்னி மற்றும் தொக்கை சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொண்டால் சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Kongura Pachadi
Yield: 4 People
Calories: 60kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு புளிச்ச கீரை
  • 12 வர ‌மிளகாய்
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 5 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் ஒரு கட்டு புளிச்சக்கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து கழுவி தண்ணீரை சுத்தமாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மல்லி, வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வர மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய், மல்லி, சீரகம், வெந்தயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய், உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான கோங்குரா பச்சடி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 60kcal | Carbohydrates: 9g | Protein: 6g | Fat: 2g | Sodium: 25mg | Potassium: 167mg | Fiber: 4g | Vitamin A: 141IU | Vitamin C: 8.4mg | Calcium: 30mg | Iron: 4.81mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கனவாய் மீன்  வறுவல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!