காரசாரமான சுவையில் ஆந்திரா ஸ்டைல் ஆவக்காய் ஊறுகாய் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

ஆவக்காய் ஊறுகாய் ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதில் ஆவ என்ற வார்த்தை கடுகையும், காய் என்பது மாங்காயையும் குறிக்கின்றன. மாங்காயை வைத்து வகை வகையாக பல்வேறு பதார்த்தங்களைச் செய்து சாப்பிடுவோம். ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாம்பழ சீசன் நிலவும்போது மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அப்போது, மாங்காய் ஊறுகாய் போடுவதும் பலரது வழக்கம். இந்த ஆவக்காய் ஊறுகாய் காரசாரமான சுவை நிறைந்த ஊறுகாய்.

-விளம்பரம்-

இது அனைத்து வகையான சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன். நல்ல காரசாரமான இந்த ஊறுகாய் சைடு டிஷ் இல்லாத நாட்களில் நிச்சயம் கைகொடுக்கும். காரம் மற்றும் புளிப்பு சுவையின் கலவையான இந்த ஆவக்காய் ஊறுகாய் சப்பாத்தி முதல் தயிர் சாதம் வரை பல உணவுகளுக்கு பெஸ்ட் சைடு டிஷ் ஆக இருக்கும். பக்குவமாக வைத்துக்கொண்டால் 6 மாதம் வரை வைத்து ருசிக்கலாம். ஆவக்காய் ஊறுகாய் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய ஊறுகாய் ஆகும்.மாங்காய் துண்டுகளை கடுகு, வெந்தயம், மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்த எண்ணெயில் ஊற விடுவதே ஆவக்காய் ஊறுகாய் ஆகும்.

- Advertisement -

கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கடைகளில் விற்கும் பாட்டில் ஊறுகாயில் சுவை அதிகரிப்பதற்காக சுவையூட்டிகள் சேர்ப்பார்கள். அது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். மேலும், நிறைய பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இனி‌ வரப்போகிற வெயில் காலத்தில் கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஆவக்காய் ஊறுகாய் சூப்பரான காமினேஷன். இன்றைய பதிவில் பாரம்பரியமான ஆவக்காய் ஊறுகாயின் செய்முறையை பார்க்கப் போகிறோம்.

Print
No ratings yet

ஆவக்காய் ஊறுகாய் | Andhra Style Aavakkaai Pickle Recipe In Tamil

ஆவக்காய் ஊறுகாய் ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதில் ஆவ என்ற வார்த்தை கடுகையும், காய் என்பது மாங்காயையும் குறிக்கின்றன. மாங்காயை வைத்து வகை வகையாக பல்வேறு பதார்த்தங்களைச் செய்து சாப்பிடுவோம். ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாம்பழ சீசன் நிலவும்போது மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அப்போது, மாங்காய் ஊறுகாய் போடுவதும் பலரது வழக்கம். இந்த ஆவக்காய் ஊறுகாய் காரசாரமான சுவை நிறைந்த ஊறுகாய். இது அனைத்து வகையான சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன். நல்ல காரசாரமான இந்த ஊறுகாய் சைடு டிஷ் இல்லாத நாட்களில் நிச்சயம் கைகொடுக்கும். காரம் மற்றும் புளிப்பு சுவையின் கலவையான இந்த ஆவக்காய் ஊறுகாய் சப்பாத்தி முதல் தயிர் சாதம் வரை பல உணவுகளுக்கு பெஸ்ட் சைடு டிஷ் ஆக இருக்கும். பக்குவமாக வைத்துக்கொண்டால் 6 மாதம் வரை வைத்து ருசிக்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH, Pickle
Cuisine: andhra, Indian
Keyword: Andhra Aavakkaai Pickle
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி மாங்காய்
  • 1/2 கப் மிளகாய்த்தூள்
  • 3/4 கப் கடுகு
  • 1/2 கப் கல் உப்பு
  • 250 மிலி நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் மாங்காயை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் ஒரு துணியால் துடைத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் கடுகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு பவுடராக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் நாம் அரைத்து வைத்துள்ள கடுகுப்பொடி, மிளகாய் பொடி, உப்பு, நல்லெண்ணை சேர்த்து நன்கு கையால் கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு பௌலில் கொஞ்சம் நல்லெண்ணை சேர்த்து, அத்துடன் நறுக்கி வைத்துள்ள மாங்காய் மற்றும் மிளகாய் தூள் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் மீண்டும் நல்லெண்ணெயை மேலே ஊற்றி கலந்து மூடி வைக்கவும். அப்படியே ஒரு வாரம் தொடர்ந்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் ஆந்திரா ஸ்டைல் காரசாரமான ஆவக்காய் ஊறுகாய் தயார்.‌ இந்த ஆவக்காய் ஊறுகாய் வெறும் சாதத்தில் போட்டு, நெய் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 350g | Calories: 99kcal | Carbohydrates: 24.7g | Protein: 9.35g | Fat: 2.4g | Sodium: 26mg | Potassium: 277mg | Fiber: 2.6g | Vitamin A: 765IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 1.3mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!