ஆன்மீகத்தில் மூழ்கி போய் இருக்கும் ஐந்து ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்?

- Advertisement -

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மிகவும் பிடிக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அவரவர்களை அந்த விஷயத்தில் ஈடுபடுத்தி கொள்வார்கள்.அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சிலர் முழுவதுமாக தங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆன்மீகம் என்பது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடியது. ஆன்மீகத்தில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாமல் யாரையும் தகாத வார்த்தைகளில் பேசாமல் தேவையில்லாத சண்டையிடாமல் ஒழுக்கமான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சில விஷயங்களை நேர்மையான முறையில் கையால ஆன்மீகம் உதவும் என்று சொல்கிறார்கள். தங்களை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வதற்கு ஆன்மீகம் மிகவும் பெரியதாக உதவி புரியும்.

-விளம்பரம்-

ஜாதகப்படி மொத்தம் 12 ராசிகள் உள்ளது. இந்த 12 ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணாதிசயங்களையும் ஒவ்வொரு வாழ்க்கை முறையும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஆன்மீகத்தில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சில ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

கடக ராசிக்காரர்கள்

கடக ராசிக்காரர்கள் அன்பை மட்டுமே நம்புகிறவர்கள். அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அன்பால் ஆன்மீகத்தால் மட்டுமே உறவுகளை இணைக்க முடியும் என்று ஆணித்தனமாக நம்புகிற கடக ராசிக்காரர்கள் தங்களை முழுவதுமாக ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள். முழுவதுமாக பக்தியுடன் ஆன்மீக வழியில் யாரையும் புண்படுத்தாமல் அன்பை மட்டுமே கொடுத்து வாழ்கிறவர்கள் தான் இந்த கடக ராசிக்காரர்கள்.

சிம்ம ராசிக்காரர்கள்

தங்களுடைய வாழ்க்கையில் அனுபவங்களையும் வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஆன்மீகம் மட்டுமே கொடுக்கிறது என்று நம்புகிறார்கள். மனிதர்கள் பெற்ற மிகப்பெரிய பரிசு ஆன்மீகம் என்று கருதுகிறார்கள். ஆன்மீகத்தால் மட்டுமே வாழ்க்கை மேம்படும் என்று எண்ணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அழுத்தமாக இருக்கும்.

தனுசு ராசிக்காரர்கள்

தனுசு ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவர்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் சமூகத்தில் ஒரு விஷயத்தில் கலந்து கொள்வதற்கும் ஆன்மீகம் உதவும் என்று மிகவும் ஆணித்தனமாக நம்புகிறவர்கள். ஆன்மீகத்தில் அதிகமான நம்பிக்கை வைத்து அதனை கற்றுக் கொண்டு வாழ்க்கையில் அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் தனுசு ராசிக்காரர்கள். ஆன்மீகத்தை தீவிரமாக கற்றுக்கொண்டு அதன்படி சமூகத்தை மாற்ற வேண்டும் என்று கருதுகிறவர்கள் தான் இந்த தனுசு ராசிக்காரர்கள்.

-விளம்பரம்-

விருச்சிக ராசிக்காரர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுக்கு மேல் ஒரு பெரிய சக்தி உள்ளது அது ஆன்மீக சக்தி மட்டுமே என்று நினைப்பவர்கள். இவர்கள் தங்களுடைய ஆன்மாவையும் வாழ்க்கையையும் அமைதி படுத்த ஆன்மீகத்தை நோக்கி செல்கிறவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் வலிமையானவர்களாக இருந்தாலும் உணர்திறன் உடையவர்களாக இருக்கிறார்கள் எனவே இவர்கள் ஆன்மீகத்தை நோக்கி செல்கிறார்கள்.

மீன ராசிக்காரர்கள்

மீன ராசிக்காரர்கள் அவர்களுடைய வாழ்க்கையை முழுவதுமாக ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்த நினைப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில் எல்லாமே ஆன்மீகம் மட்டுமே என்று கருதுவார்கள். ஜோதிட நிகழ்வுகளை முழுவதுமாக நம்புவார்கள். ஜோதிடத்தால் மட்டுமே எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று நினைப்பவர்கள் தான் இந்த மீன ராசிக்காரர்கள்.

இதனையும் படியுங்கள் : இந்த 5 ராசிக்கார்கள் தான் கற்பூர புத்தி கொண்ட புத்திசாலிகளாம்! எந்த 5 ராசிகள் தெரியுமா ?

-விளம்பரம்-