Home ஸ்வீட்ஸ் வாயில் கரைந்தோடும் அசோகா அல்வா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வாயில் கரைந்தோடும் அசோகா அல்வா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

அல்வா அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே வாயில வச்ச உடனே கரைய கூடிய அல்வா ரொம்பவே பிடிக்கும். இந்த அல்வா ரெசிபி செய்றது ரொம்பவே ஈஸி தான். நம்ம நிறைய அல்வா சாப்பிட்டிருப்போம் கேரட் அல்வா பீட்ரூட் அல்வா கோதுமை அல்வா காசி அல்வா ஆனா இப்போ நம்ம அசோகா அல்வா செய்ய போறோம். அசோகா அல்வா அப்படின்னா ஒரு சிலருக்கு என்னனே தெரிஞ்சிருக்காது. ஆனா நம்ம வீட்ல இருக்கக்கூடிய பாசிப்பருப்பு வச்சு செய்யக்கூடியது தான் இந்த அசோகா அல்வா.

-விளம்பரம்-

வாயில வச்ச உடனே கரைஞ்சு போகக்கூடிய இந்த அசோகா அல்வா கண்டிப்பா எல்லாரும் வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இந்த அல்வாவை செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த அல்வாவோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். உங்க வீட்ல எதையாவது விசேஷங்கள் பண்டிகைகள் வந்தா கண்டிப்பா இந்த அசோகா அல்வா ட்ரை பண்ணி பாருங்க.

எப்பவும் ஒரே மாதிரியா கேசரி பாயாசம் அப்படின்னா செய்யாம இந்த அசோகா அல்வா செஞ்சு சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்டோட சாப்பிடுவதற்கும் ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த அசோக அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

அசோகா அல்வா | Ashoka Halwa recipe In Tamil

அல்வா அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே வாயில வச்ச உடனே கரைய கூடிய அல்வா ரொம்பவேபிடிக்கும். இந்த அல்வா ரெசிபி செய்றது ரொம்பவே ஈஸி தான். நம்ம நிறைய அல்வா சாப்பிட்டிருப்போம்கேரட் அல்வா பீட்ரூட் அல்வா கோதுமை அல்வா காசி அல்வா ஆனா இப்போ நம்ம அசோகா அல்வா செய்யபோறோம். அசோகா அல்வா அப்படின்னா ஒரு சிலருக்கு என்னனே தெரிஞ்சிருக்காது. ஆனா நம்ம வீட்லஇருக்கக்கூடிய பாசிப்பருப்பு வச்சு செய்யக்கூடியது தான் இந்த அசோகா அல்வா.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Ashoka Halwa
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பருப்பு
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1 கப் நெய்
  • 2 கப் சர்க்கரை
  • 15 முந்திரி பருப்பு
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • பாசிப்பருப்பு ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் கால் கப் கோதுமை மாவை போட்டு நன்றாக வறுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்குகிளறவும்.
  • பிறகு வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து அதில் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
     
  • பாசிப்பருப்பு மற்றும் கோதுமை மாவு நன்றாக கலந்து வரவும் அதில் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து நன்றாககிளறவும்
  •  
    இடையிடையே நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • நன்றாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து இறக்கினால் சுவையானஅசோகா அல்வா தயார்

Nutrition

Serving: 300g | Calories: 112kcal | Carbohydrates: 3.6g | Protein: 4.5g | Sodium: 6mg | Potassium: 17mg | Vitamin A: 21IU | Calcium: 18.3mg | Iron: 2.26mg

இதையும் படியுங்கள் : மாலை நேரங்களில் சாப்பிட மொறு மொறுனு பாசிப்பருப்பு முறுக்கு இப்படி செய்து கொடுங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!