ருசியான அவரைக்காய் தேங்காய் பால் கிரேவி கிரேவி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அப்படியானால் அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் தேங்காய் பால் கிரேவி‌ செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். பெரும்பாலும் இந்த அவரைக்காய் கிரேவி தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. ஒரு சிலர் எந்த உணவிலும் காரத்தை தவிர்ப்பார்கள். ஒரு சிலர் தேங்காய் சேர்த்து மட்டுமே உணவு சமைப்பார்கள், தேங்காய் இல்லாமல் எந்த உணவும் இருக்காது. காரம் குறைவாக சாப்பிடுபவர்களுக்கு இந்த கிரேவி சிறந்த உணவாக இருக்கும்.

-விளம்பரம்-

அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரி செய்கிறது. எனவே அடிக்கடி அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில் ஒரு முறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும். இந்த அவரைக்காய் கிரேவி காரக்குழம்பு, பூண்டு குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். செய்து பாருங்கள்.இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது. எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
4 from 1 vote

அவரைக்காய் தேங்காய் பால் கிரேவி | Avarakkai Gravy Recipe In Tamil

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அப்படியானால் அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் தேங்காய் பால் கிரேவி‌ செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். பெரும்பாலும் இந்த அவரைக்காய் கிரேவி தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. ஒரு சிலர் எந்த உணவிலும் காரத்தை தவிர்ப்பார்கள். ஒரு சிலர் தேங்காய் சேர்த்து மட்டுமே உணவு சமைப்பார்கள், தேங்காய் இல்லாமல் எந்த உணவும் இருக்காது. காரம் குறைவாக சாப்பிடுபவர்களுக்கு இந்த கிரேவி சிறந்த உணவாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Avarakkai Gravy
Yield: 4 People
Calories: 341kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 150 கி அவரைக்காய்
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அவரைக்காயை தண்ணீரில் நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும்.
  • பின் மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அவரைக்காய் சிறிது வெந்ததும் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு‌ அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான அவரைக்காய் தேங்காய் பால் கிரேவி தயார். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 341kcal | Carbohydrates: 5.3g | Protein: 26.1g | Fat: 1.5g | Saturated Fat: 0.3g | Sodium: 81mg | Potassium: 106mg | Fiber: 1.2g | Vitamin A: 79.5IU | Vitamin C: 2.1mg | Calcium: 103mg | Iron: 6.7mg

இதனையும் படியுங்கள் : ருசியான அவரைக்காய் மட்டன் கீமா ஒரு முறை இப்படி செய்து, சுட சுட சாதத்துடன் சாப்பிட்டு பாருங்க அற்புதமாக இருக்கும்!