- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கைப் பக்குவமும் இருக்கும். அவ்வாறு ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். அவ்வாறு அசைவ உணவு என்றாலே கோழிக்கறி, ஆட்டுக்கறி அல்லது மீன் வகைகள் தான்.
இவற்றில் பலரும் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறியை தான். ஆனால் ஒரு சிலர் கோழிக் கறியைத் தவிர்த்து ஆட்டுக்கறியை மட்டுமே வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். அவர்களுக்கு வித்தியாசமான முறையில் இவ்வாறு அவரைக்காய் சேர்த்து மட்டன் கீமா செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள்.
வீட்டில் இருப்பவர்கள் விரும்ப கூடிய ஒரு உணவு என்றால் அது அசைவம் தான். நிறைய பேருக்கு அதில் மட்டன் மிகவும் பிடித்தமானது என்று கூட சொல்லலாம். இந்த மட்டன் வைத்து விதவிதமாக சமைக்கலாம். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி அவரைக்காய் மட்டன் கீமா. இதை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சைடிஷ் ஆக செய்தால் ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும். அசைவ வாசம் பிடிக்கும், அசைவம் பிடிக்கும் என்பவர்கள் இந்த அவரைக்காய் சேர்த்து மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். வாங்க இந்த அவரைக்காய் மட்டன் கீமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மட்டன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் மட்டன் கீமாவை சுத்தம் செய்து அதனுடன்அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து புட்டு மாவு அவிப்பது போல் இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அவரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒருகடாயை வைத்து, 8 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்புசேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும்சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாகவதக்கி விட்டு, அதன் பின் நறுக்கி வைத்துள்ள அவரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துநன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் வேக வைத்த மட்டன் கீமாவையும் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவேண்டும்.
பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவிஅடுப்பை அனைத்துவிட வேண்டும்.






