Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மட்டன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம்...

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மட்டன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

மட்டனில் பல உணவுகள் வெரைட்டியா செய்து சாப்பிட்டு நம்ம நாக்குக்கு நிறைய ருசியை கொடுத்து வச்சிருக்கோம். இப்போ ஆல்ரெடி சாப்பிட்டா அதே மாதிரியான மட்டன் வறுவல் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்குக்கு கொஞ்சம் போர் அடிச்சு தான் போயிருக்கும். அதனால தான் இப்போ ரொம்பவே வித்தியாசம் வித்தியாசமா மட்டனில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட போறோம். அப்படியே இப்போ மட்டனில் புதுசா என்ன பண்ண போறோம் அப்படின்னா  கபாப் பண்ண போறோம்.  மட்டன் கபாப் ரொம்ப சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த மட்டன் கபாப் ரொம்ப டேஸ்டியா ஈசியாவே செய்து விடலாம். இதுக்கு சிம்பிளா மசாலா ரெடி பண்ணா போதும் நம்ம ஜஸ்ட் ஊறவைத்து எண்ணைல போட்டு பொரிச்சு எடுத்து சாப்டோம்னா நாக்குல நர்த்தனமாடும் அளவுக்கான சுவைல இருக்கும் இந்த மட்டன் கபாப். இந்த கபாப் செய்து சாப்பிடும் போது என்ன ஒரு சுவையாக இருக்கும். அதுலயும் இந்த கபாப்போட நிறம் நம்ம கண்ணுக்கு பஸ்ட் நல்ல விருந்தா இருக்கும். அந்த கண்ணுக்கு விருந்து முடிந்தவுடன் வாசனை நம்ம நுகரும்போது மூக்குக்கும் விருந்து முடிஞ்சு திருப்தியா இருக்கும்.

கடைசியா அந்த மட்டனை எடுத்தப்படி வாயில வைக்கும் போது நாக்குல பட்டதும் மட்டன் சுவை  உடல் உறுப்புகள் எல்லாத்துக்குமே ஒரு நல்ல உணவு சாப்பிட்ட ஒரு திருப்தி கிடைக்கும். இந்த மாதிரி மட்டன் நிறைய வெரைட்டி செய்து கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கு இருந்து பெரியவங்க வரை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

பொதுவாக ஒரே மாதிரியான உணவுகள் செய்யும்போது எல்லாருக்குமே ஒரு சலிப்பு வந்துரும். ஆனால் நம்ம ஒரே ஐட்டம் கொஞ்சம் டிஃபரண்டா வேற ஏதாவது மசாலா சேர்த்து பண்ணி கொடுக்கும் போது அவங்களுக்கு அது ரொம்பவே பிடிச்ச விஷயமாக மாறிடும். இன்னிக்கு அம்மா புதுசா செஞ்சுருக்காங்க அப்படிங்கற ஒரு எண்ணம் வந்து அவங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். அப்படி இன்னைக்கு நம்ம புதுசா பண்ண போறது மட்டன் கபாப் அந்த மட்டன் கபாப் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.

Print
4 from 1 vote

மட்டன் கபாப் | Mutton Kabab Recipe In Tamil

மட்டன் கபாப் ரொம்ப டேஸ்டியா ஈசியாவே செய்து விடலாம்.இதுக்கு சிம்பிளா மசாலா ரெடி பண்ணா போதும் நம்ம ஜஸ்ட் ஊறவைத்து எண்ணைல போட்டு பொரிச்சுஎடுத்து சாப்டோம்னா நாக்குல நர்த்தனமாடும் அளவுக்கான சுவைல இருக்கும் இந்த மட்டன் கபாப்.இந்த கபாப் செய்து சாப்பிடும் போது என்ன ஒரு சுவையாக இருக்கும். அதுலயும் இந்த கபாப்போடநிறம் நம்ம கண்ணுக்கு பஸ்ட் நல்ல விருந்தா இருக்கும். அந்த கண்ணுக்கு விருந்து முடிந்தவுடன்வாசனை நம்ம நுகரும்போது மூக்குக்கும் விருந்து முடிஞ்சு திருப்தியா இருக்கும். இன்னைக்கு நம்ம புதுசா பண்ண போறது மட்டன் கபாப் அந்த மட்டன் கபாப் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Mutton Kabab
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ  மட்டன்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 துண்டு இஞ்சி
  • 2 ஸ்பூன் எலுமிச்சைசாறு
  • 6 பல் பூண்டு
  • 1/4 கப் மைதா
  • 1 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மட்டனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு , தண்ணீர் சேர்த்து அரை பதம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  
    பிறகு வேக வைத்துள்ள மட்டனில் அரைத்து வைத்துள்ள புதினா கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
  • பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி கலந்து வைத்துள்ள மட்டனை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். மட்டன் அரை மணி நேரம் ஊறிய பிறகு அதில் மைதாமாவ சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதையும் நன்றாக சேர்த்து கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்த பிறகுஅதில் கலந்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.
  •  
    மட்டன் துண்டுகள் இரண்டு புறமும் நன்றாக பொரிந்து வெந்த பிறகு அவற்றை எடுத்து வட்ட வடிவ வெங்காயத்தோடு சேர்ந்து பரிமாறினால் சுவையான  மட்டன் கபாப் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg

இதையும் படியுங்கள்: மழைக்கு இதமா சுட சுட சாப்பிட புதினா சிக்கன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க அருமையாக இருக்கும்!

-விளம்பரம்-