பொதுவாக நாம் வாழ்வில் கஷ்ட காலங்கள் வரும் பொழுது தான் கடவுளை பற்றி அதிகமாக சிந்திப்போம் அப்பொழுது தான் நமது குறைகளை கூறி அதை நிவர்த்தி செய்ய நாம் வீட்டு பூஜை அறையிலையோ அல்லது அவர் அவர்களுக்கு உரிய குலதெய்வம், இஷ்ட தெய்வ கோவில் சென்று பூஜை, வழிபாடு, புனஸ்காரங்கள் செய்து நமக்கு இருக்கும் கஷ்ட, நஷ்டங்களை கடவுளிடம் சொல்லி மனதார வேண்டிக் கொள்வோம். இப்படி நாம் கடவுளை பூஜிக்கும் போது சில கடவுளுக்கு பிடித்த பொருட்களை வைத்து பூஜை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். அதில் மலரும் மலரும் அடங்கும் ஆனால் சில கடவுளுக்கு சில மலர்களை வைத்து பூஜை செய்யக்கூடாது அது என்னென்ன மலர்கள்கள் எந்தெந்த கடவுளுக்கு என்பதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

மலரை வைத்து பூஜை செய்ய கூடாது
நாம் கடவுளை வேண்டி பூஜை செய்து செய்யும்போது அது நமது குலதெய்வமாக இருந்தாலும் சரி நமது இஷ்ட தெய்வமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு என்று உரிய சில பொருட்களை வைத்து நாம் அந்த பூஜை செய்வது வழக்கமாக வைத்து இருப்போம். உதாரணமாக விநாயகருக்கு பூஜை செய்யும் போது அவருக்க பிடித்த செம்பருத்தி பூவை பூஜையில் வைத்திருப்போம். அதே போன்று தான் சில மலர்களை சில தெய்வங்களுக்கு அவர்களுக்குரிய மலரை வைத்து பூஜை செய்து வழிபட்டாலே போதும் அவர்கள் மனம் குளிர்ந்து நமக்கு அவர்களின் ஆசியை வழங்குவார்கள். ஆனால் அதேபோல் சில
தெய்வங்களுக்கு சில மலர்களை வைத்து பூஜையும் செய்யக்கூடாது அது என்னென்ன உங்களுக்கு தெரியுமா

அது என்ன மலர்கள்
விநாயகருக்கு எக்காரணம் கொண்டும் துளசி மலரை வைத்து பூஜை செய்யக்கூடாது.
சூரிய பகவானை பூஜை செய்யும் போது தும்பை மலரை பயன்படுத்தக் கூடாது.
சிவனின் அவதாரமான பைரவரை நாம் வழிபடும் போது அரளி பூவை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
துர்க்கை அம்மனை பூஜை செய்து வழிபடும் பொழுது நந்தியாவட்டை மலரை பயன்படுத்தக் கூடாது.
பார்வதி தேவிக்கு நாம் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்போது பாதரி மலரை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
விஷ்ணு பகவானுக்கு செம்பருத்தி பூவை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்யக்கூடாது.
அதேபோல் சிவபெருமானுக்கு எக்காரணம் கொண்டு தாழம்பூவை வைத்து பூஜை புனஸ்காரங்கள் வழிபாடு செய்யக் கூடாது