நாம் வீடு சொந்தமாக கட்டினாலும் அல்லது புதியதாக ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றாலும் நாம் இருப்பதற்கு எந்த அளவுக்கு அறைகளை பார்க்கிறோமே. அதே முக்கியத்துவம் வீட்டில் பூஜை அறைக்கு கொடுப்போம். ஏன் வீட்டில் பூஜை அறை தயார் செய்ய இயலாதவர்கள் கூட ஏதேனும் ஒரு இடத்தை இறைவழிபாடு செய்வதற்காக தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஏனென்றால் நமது வீட்டில் இருக்கும் குடும்பம், சந்தோசமாகவுமம, மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியோடு வாழ்வதற்கு இறைவழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம். அதனால் வீட்டில் பூஜை அறைக்கு என்ற ஒரு இடத்தை உருவாக்கி அங்கு இறை வழிபாடு செய்து செய்து நமது வீட்டின் தெய்வ சக்தியை அதிகரித்துக் கொள்கிறோம்.

துன்பம் தரும் கடவுள் சிலைகள்
ஆனால் கடவுளுக்கு என நாம் பூஜை அறை வைத்து அதற்கென்று தனி இடம் ஒதுக்கி தினசரி இறைவழிபாடு செய்யும் நாம் ஒரு சில தெய்வ சிலைகளை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதைப் பற்றிய உங்களுக்கு தெரியுமா ? பொதுவாக நம் வீட்டில் எந்த கடவுள்கள் படம் இருக்கிறதோ இல்லையோ நம்மை பாதுகாக்கும் குல தெய்வத்தின் படம் கட்டாயம் இருக்கும் அதுபோன்று இஷ்ட தெய்வங்களில் திருவுருவப்படமா அல்லது சிலைகள் வைத்து நாம் வழிபடுவோம். ஆனால் சில தெய்வத்தின் சிலையை வைத்து வழிபடுவது என்பது சரியான முறையில் வழிபட்டு வந்தால் அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமல் முறையில்லாமல் வழிபட்டு வந்தால் அதுவே நமது வீட்டில் கஷ்டங்களையும் துன்பங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

எந்த கடவுள் சிலை வைத்திருக்க கூடாது
அப்படி நாம் என்னென்ன சிலைகளை பூஜையில் வைத்து வழிபடக்கூடாது தெரியுமா ? பசுவுடன் கண்று இருக்கும் காமதேனு சிலை, அன்னபூரணி தாயார் சிலை, மகாலட்சுமி தயார் சிலை, விநாயகர் சிலை போன்ற தெய்வங்களின் சிலைகளை வைத்திருக்கக் கூடாது. ஆனால் வைத்து இருக்கலாம் எப்படி வைத்திருக்கலாம் தெரியுமா ? நாம் வைத்திருக்கும் சிலைகள் எல்லாம் ஒரு அங்குலம் அளவில் தான் இருக்க வேண்டும். அதற்கு மேல உயரமுள்ள சிலைகளை வைத்து வணங்கும்போது சரியான வழிமுறைகளை கடைபிடித்து பூஜை செய்து நெய்வேத்தியம் படைத்து வணங்க வேண்டும். நாம் சிறிய தவறு செய்தாலும் கூட அதன் பாதிப்பு பெரியதாக இருக்கும்.
முடிந்தளவு தவிர்த்து கொள்ளுங்கள்
அதனால் முடிந்த அளவிற்கு இந்த கடவுள்களில் சிலைகளை எல்லாம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதை தவிர்த்து விட்டு திருவுருவப்படங்கள் வைத்து வழிபடுங்கள். அப்படி வீட்டில் சிலைகளை வைத்து வழிபட போகிறேன் என்பவர்கள் அந்த சிலைகளுக்குரிய சரியான பூஜை வழிபாடுகளை முறையாக தெரிந்து கொண்டு வழிபடுங்கள் நல்ல பலனையும் கொடுக்கும். பூஜை வழிபாடுகளை சரியாக செய்ய தெரியாதவர்கள் இது போன்ற செய்வதை முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்ளுங்கள்