நாம் எதற்காக ஆயூத பூஜை கொண்டாடுகிறோம் தெரியுமா ?

- Advertisement -

ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் நாம் ஒரே நாளில் ஏன் கொண்டாடுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா நவராத்திரியின் போது ஒன்பது நாட்களில் தினம் ஒரு தெய்வத்துக்கு பூஜை செய்வோம். ஒவ்வொரு தினங்களில் ஒவ்வொரு தெய்வத்தை வழக்கமாக வழிபட்டு வருவதன் காரணமாக நவராத்திரியின் அந்த ஒன்பதாவது நாளில் தேவி சரஸ்வதி தேவியையும் நாம் வழிபடும் காரணத்தினால் தான் அன்றைய நாளை ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்று நாம் அழைக்கிறோம். ஆகையால் இந்த ஒன்பது நாளில் ஒன்பதாவது நாட்களில் அனைவரும் அவர்களது வீட்டில் தினம் ஒவ்வொரு வகையான பிரசாதம் செய்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆயுத பூஜை கொண்டாட காரணம் 1

மகிஷாசுரன் என்று அழைக்கப்படும் கொடுர அரக்கன் தனது படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் போர் புரிய வந்தான். கொடுர அரக்கன் மகிஷாசுரன் செய்யும் கொடூரத்தனமான கொலைகள் மற்றும் அக்கிரம செயல்களை பார்த்து ஆக்ரோஷம் அடைந்தா தேவி துர்க்கை அம்மன் அவதாரம் எடுத்து தன் கையில் இருக்கும் வாழ், வில் போன்ற ஆயுதங்களால் மகிஷாசுரனை வதம் செய்து இந்த பூலோகத்தில் நீதியை நிலைநாட்டினார்.

- Advertisement -

மகிஷாசுரன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் இடையே நடந்த இந்த போர் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதால். இந்த ஒன்பது நாட்களில் ஒன்பதாவது நாளான இன்று மகிஷாசுரன் வதம் செய்யப்பட்டதால். அதை கொண்டாடும் வகையில் இந்த நாளை ஆயுத பூஜை தினமாக காலம் காலமாக கொண்டாடுகிறோம் என்று சில புராணங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

ஆயுத பூஜை கொண்டாட காரணம் 2

மகாபாரதம் புராண கதையின் மூலமாக நமக்கு தெரிய வருவது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே யார் அடுத்து இந்த நாட்டை ஆளப்போவது என்ற குடும்ப பிரச்சனை காரணமாகவும், உலகின் எடையே சமம் செய்வதற்காக மகாவிஷ்ணுவின் அவதாரம் கிருஷ்னரால் நடத்த பட்டதே இந்த மகாபாரத போர். இதில் பாண்டவர்கள் கௌரவர்களின் சூழ்ச்சியினால் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும் சூழ்நிலை உண்டாகியது.

அதனால் வனவாசம் போகும்போது ஆயுதங்கள் எதற்கு என்று பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு மரத்தடியில் புதைத்து வைத்து விட்டதாகவும் வருடத்திற்கு ஒருமுறை பாண்டவர்கள் அங்கு வந்து தங்கள் ஆயுதங்களை வெளியே எடுத்து பூஜிப்பது வழிபடுவது என்று 14 ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்த காரணத்தினால் தான் போரில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆகையால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை பூஜித்த அந்த நாளைய தொடர்ந்து நாம் ஆயுத பூஜை ஆக கொண்டாடுகிறோம் என்று மகாபாரத புராணம் நமக்கு கூறுகிறது.

-விளம்பரம்-

ஆயூத பூஜை எப்படி வழிபட வேண்டும்

ஆயுத பூஜை எப்படி கொண்டாட வேண்டும் என்றால் வருடம் முழுவதும் நம்முடைய உழைப்பிற்கு நம்முடன் இனைந்து முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதங்களின் மரகத்துவத்தை உணர்த்துவதற்கு இந்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் நம்முடன் வருட முழுவதும் உறுதுணையாக இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் என்ன அனைத்தும் பொருட்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து நாம் அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.

அப்படி நாம் செய்யும் பூஜையின் போது நாம் பயண்படுத்தும் ஆயுதங்களை கடவுள் முன்பாக வைத்து கடவுளிடம் முழுவதுமாக சரணடைந்து. இந்த ஆயுதங்களை நான் அழிவு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு ஒரு போதும் பயன்படுத்த மாட்டேன் என்றும் இந்த ஆயுதங்களால் ஆக்கப்பூர்வமான காரியங்கள் மட்டுமே செய்வேன் என்றும் துர்க்கை மற்றும் சரஸ்வதி தேவிகளை வேண்டி நாம் வழிபட வேண்டும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here