தித்திக்கும் சுவையில் பாதுஷாவை சுலபமாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் அவர்கள் குஷி ஆகி விடுவார்கள்!

- Advertisement -

பேக்கரியில் ஸ்வீட் பாக்ஸில் இனிப்புகள் வாங்கும் நமக்கு ஒரே ஒரு பாதுஷா மட்டுமே கிடைக்கும். அந்த ஒரு பாதுஷாவிற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே அடித்துக் கொள்வார்கள் அந்த அளவிற்கு ஒரு சுவையான இனிப்பு தான் இந்த பாதுஷா. இந்த பாதுஷா பலவகையான கலர்களில் நமக்கு கிடைக்கும். பலவகையான சைசுகளிலும் கிடைக்கும். ஆனால் சுவை என்னவோ ஒரே மாதிரியாக மிகவும் சுவையாக தான் இருக்கும்.

-விளம்பரம்-

இந்த பாதுஷாவை நாம் இதுவரையில் கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம்மால் வீட்டிலேயே பேக்கரியில் கிடைக்கும் அளவிற்கு சுவையில் செய்ய முடியும். இந்த பாதுஷா செய்வதற்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது.

- Advertisement -

நாம் நினைக்கும் அளவிற்கு இந்த பாதுஷா செய்வது மிகப் பெரிய வேலையும் கிடையாது மிகவும் சுலபமாக எளிதாகவே கடைகளில் கிடைக்கக்கூடிய அளவிற்கு சுவையோடு அட்டகாசமாக வீட்டிலேயே அனைவருக்கும் பிடித்த வகையில் நம்மால் செய்து கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பாதுஷாவை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் குஷி ஆகி விடுவார்கள். வாங்க இந்த பாதுஷாவை சுவையா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
3 from 1 vote

பாதுஷா | Badusha Recipe In Tamil

நாம் நினைக்கும் அளவிற்கு இந்த பாதுஷா செய்வது மிகப் பெரிய வேலையும் கிடையாது மிகவும் சுலபமாக எளிதாக வேகடைகளில் கிடைக்கக்கூடிய அளவிற்கு சுவையோடு அட்டகாசமாக வீட்டிலேயே அனைவருக்கும் பிடித்த வகையில் நம்மால் செய்து கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பாதுஷாவைசெய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் குஷி ஆகி விடுவார்கள். வாங்க இந்த பாதுஷாவை சுவையா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Badusha
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மைதா மாவு
  • 1/2 கிலோ சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை சமையல் சோடா
  • 1 சிட்டிகை கேசரி பவுடர்
  • 3 டீஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 100 கிராம் டால்டா
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்

செய்முறை

  • ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு ,உப்பு ,தயிர் ,நெய் ,டால்டா ,சமையல் சோடா, அனைத்தையும் போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் ஏலக்காய் தூளையும் கேசரி பவுடரையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பாகுபதம் வரும் வரை காத்திருக்க தேவையில்லை சர்க்கரை நன்றாக கரைந்து வந்தாலே போதுமானது.
  • இப்போது கலந்து வைத்துள்ள மாவினை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் ஊறிய பிறகு அதில் உங்களுக்கு தேவையான அளவிற்கு உருண்டைகளாக உருட்டி நடுவில் ஒரு குழி இட்டுக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்துள்ள குழி உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது பொறுத்தவைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தால் சுவையான பாதுஷா தயார்.

செய்முறை குறிப்புகள்

 
இனிமேல் கடைகளில் போய் பாதுஷா வாங்கி வீட்டில் சண்டை போட தேவையில்லை வீட்டிலேயே எத்தனை பாதுஷாக்கள் வேண்டுமானாலும் அதனை நாமே செய்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 160kcal | Carbohydrates: 16g | Protein: 18g | Cholesterol: 31mg | Sodium: 12mg | Potassium: 31mg | Fiber: 1g | Calcium: 13mg