மெத்து மெத்துனு சூப்பரான வாழைப்பழ கேக் இப்படி ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

உங்க வீட்டில வாழைப்பழம் நிறைய இருக்கா அதை வச்சு என்ன ஸ்நாக்ஸ் பண்றது இல்ல அத வச்சு என்ன பண்றதுனே தெரியல ஒரு சூப்பர் டேஸ்டான கேக்கும் நீங்க சாப்பிட்ட மாதிரி இருக்கும். ஒரு வாழைப்பழமும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் ஈசியா சூப்பரா இந்த டேஸ்டியான கேக் செஞ்சிடலாம். டெய்லி குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுக்கிறதுன்னு குழப்பமா இருந்தா ஒருநாள் ஈவினிங் ஸ்நாக்ஸா இந்த கேக் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு அடம் பிடிக்காமல் உட்கார்ந்து படிப்பாங்க.

-விளம்பரம்-

உங்க வீட்ல யாராவது விருந்தாளி வந்தாலும் அவங்களுக்கும் நீங்க இதை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்ட்டான கேக் தான் இந்த வாழைப்பழ கேக். வாழைப்பழம் மச்சி நம்ம நிறைய ஸ்நாக்ஸ் ரெசிப்பிஸ் வாழைப்பழ அல்வா வாழைப்பழ அப்பம் வாழைப்பழம் மில்க் ஷேக் பின்னர் எக்கச்சக்கமா வாழைப்பழம் ரெசிபி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் எல்லாருக்குமே இந்த வாழைப்பழ கேக் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

- Advertisement -

டீ கடையில வச்சிருக்கிற வாழைப்பழ கேக் எடுத்து சாப்பிடும் போது அவ்வளவு ஒரு ஆனந்தமா இருக்கும் அந்த அளவுக்கு அதோட டேஸ்ட் நம்ம எல்லாருக்குமே பிடிச்சு போயிருக்கும். அந்த வகையில் கடையில கிடைக்கக்கூடிய அந்த சூப்பரான வாழைப்பழகி மாதிரியே நம்ம வீட்ல ஆரோக்கியமான முறையில் செய்யலாம்.எண்ணெயில பொறிக்காமல் செய்யக்கூடிய இந்த அட்டகாசமான கேக் ஆரோக்கியமானது கூட. இப்ப வாங்க இந்த டேஸ்டான ரொம்ப சிம்பிளான வாழைப்பழ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

வாழைப்பழ கேக் | Banana Cake Recipe In Tamil

உங்க வீட்ல யாராவது விருந்தாளி வந்தாலும் அவங்களுக்கும் நீங்க இதை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்ட்டான கேக் தான் இந்த வாழைப்பழ கேக். வாழைப்பழம் மச்சி நம்ம நிறைய ஸ்நாக்ஸ் ரெசிப்பிஸ் வாழைப்பழ அல்வா வாழைப்பழ அப்பம் வாழைப்பழம் மில்க் ஷேக் பின்னர் எக்கச்சக்கமா வாழைப்பழம் ரெசிபி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் எல்லாருக்குமே இந்த வாழைப்பழ கேக் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: banana cake
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 வாழைப்பழம்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங்சோடா
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 10 பாதாம்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து பாதாம் பருப்பை சேர்த்து நன்றாக வதக்கி பிறகு வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்
  • அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து வாழைப்பழம் நன்றாக மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்
     
  • பிறகு வெள்ளை கரைசல் வதக்கிய வாழைப்பழம் ஒரு கப் கோதுமை மாவு பேக்கிங் சோடா அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  • ஒரு இட்லி பாத்திரத்தில் உப்பு சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து பத்து நிமிடம் சூடாக்கி கொள்ளவும்
  • பிறகு கலந்து வைத்துள்ள மாவினை கேக் செய்யப் போகும் பாத்திரத்திற்கு மாற்றி 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான வாழைப்பழ கேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 39g | Potassium: 139mg

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான இந்த வாழைத்தண்டு புளிப்பச்சடி இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!!