சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான இந்த வாழைத்தண்டு புளிப்பச்சடி இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!!

- Advertisement -

வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைத்தண்டு ,வாழையிலை வாழைக்காய்,வாழைப்பழம் அப்படின்னு வாழை மரத்தோட எல்லா பாகங்களுமே ரொம்பவே ஆரோக்கியமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படக்கூடியது. அது மட்டும் இல்லாம வாழையிலையில் நம்ம சாப்பிடுறது நமக்கு உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும்.

-விளம்பரம்-

வாழ்க்கைல வருவல் அவியல் பொரியல்ன்னு செஞ்சா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும் அதே மாதிரி வாழைப்பழம் மற்றும் நம்ம அப்பம் மில்க் ஷேக் வாழைப்பழ ரோஸ்ட் அப்படின்னு நிறைய டிஃபரண்டான ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில் வாழைத்தண்டு வச்சு கூட நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் அதுல நம்ம இப்போ வாழைத்தண்டு வச்சு புலி பச்சடிதான் செய்யப் போறோம்.

- Advertisement -

இந்த வாழைத்தண்டு சாப்பிடறது மூலமா சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் முக்கியமான ஆண்களுக்கு இந்த வாழைத்தண்டு அதிகமா சாப்பிட கொடுத்தா அவங்க உடம்பு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். வாழைத்தண்டு வச்சு நம்ம ஒரே மாதிரியா பருப்பு கூட்டு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த புளி கூட்டு செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான வாழைத்தண்டு புளி கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3 from 2 votes

வாழைத்தண்டு புளிப்பச்சடி | Banana Stem PuliPachadi

நம்ம இப்போவாழைத்தண்டு வச்சு புலி பச்சடிதான் செய்யப் போறோம். இந்த வாழைத்தண்டு சாப்பிடறது மூலமா சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்கவரைக்கும் முக்கியமான ஆண்களுக்கு இந்த வாழைத்தண்டு அதிகமா சாப்பிட கொடுத்தா அவங்க உடம்புரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். வாழைத்தண்டு வச்சு நம்ம ஒரே மாதிரியா பருப்பு கூட்டுசெய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த புளி கூட்டு செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.இப்ப வாங்க இந்த அட்டகாசமான வாழைத்தண்டு புளி கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Raw Banana Puli Pachadi
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய துண்டு வாழைத்தண்டு
  • புளி எலுமிச்சம்பழ அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் பொடியாக்கிய வெல்லம்
  • 1 பச்சை மிளகாய்
  • 4 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • மோர் சிறிதளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி நாரை எடுத்து பின்பு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மோர் சேர்த்து வாழைத்தண்டை அதில் போட்டு வைக்கவும்
  • ஒரு பாத்திரத்தில்தண்ணீர் ஊற்றி அதில் மோர் சேர்த்து வாழைத்தண்டை அதில் போட்டு வைக்கவும்
  • பத்து நிமிடங்கள் கழித்து புளியை கரைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் இந்த வாழைத்தண்டைபோட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • நன்றாக வாழைத்தண்டு கொதித்த உடன் வெல்லம் சேர்க்கவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு தாளித்து அதிருடன் சேர்த்து இறக்கினால் சுவையான வாழைத்தண்டுபுளிப்பச்சடி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 39g | Potassium: 39mg

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் செவ்வாழை பழம் மில்க் ஷேக் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!