Home ஸ்வீட்ஸ் உங்க வீட்டில வாழைப்பழம் ரொம்ப கனிஞ்சு போய் இருக்கா அப்போ இந்த வாழைப்பழ அல்வா செஞ்சு...

உங்க வீட்டில வாழைப்பழம் ரொம்ப கனிஞ்சு போய் இருக்கா அப்போ இந்த வாழைப்பழ அல்வா செஞ்சு பாருங்க!

வாழைப்பழம் நம்மளோட அன்றாட வாழ்க்கையில எல்லாரையும் வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு பழம். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம் அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் எந்த நோயும் வராதாம் நம்ம ஹாஸ்பிடலுக்கு போக வேண்டிய அவசியம் கிடையாது. அந்த அளவுக்கு வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைஞ்சிருக்கு. இந்த வாழைப்பழம் நம்ம சும்மா சாப்பிட்டாலே ரொம்ப சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

அதுலயும் ஏதாவது ஸ்பெஷலா இந்த வாழைப்பழத்துல ஏதாவது செஞ்சு சாப்பிட்டால் அந்த வாழைப்பழத்தோட டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்.ஒரு சில குழந்தைகள் வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு எல்லாம் நம்ம அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழைப்பழம் வச்சு ஏதாவது செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வாழைப்பழம் நம்ம வாங்கின உடனே சாப்பிடணும் ரெண்டு மூணு நாள் வச்சிருந்தோம் அப்படின்னா வாழைப்பழம் ரொம்ப கனிஞ்சு போயிடும் அந்த மாதிரி கனிஞ்சு போயிடுச்சு அப்படின்னா அதை வெளியில தூக்கி போடணும்னு அவசியம் கிடையாது அதை வைத்து சூப்பரா ஒரு வாழைப்பழ அல்வா செய்யலாம்.

கனிஞ்ச பழத்துல மட்டும் தான் இந்த வாழைப்பழ அல்வா செய்யணுமா அப்படின்னு கேட்டா இல்லங்க நம்ம வீட்ல வாழைப்பழம் இருந்தாலே போதும் அதை வச்சு சூப்பரா நம்ம இந்த அல்வா செஞ்சுடலாம். வாழைப்பழம் வெச்ச நம்ம மில்க் ஷேக் வாழைப்பழ அப்பம் வாழைப்பழ பேன் கேக் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிடலாம் அது எல்லாத்தையும் விட இந்த வாழைப்பழ அல்வா ரொம்ப சூப்பரான டேஸ்டியா இருக்கும். குழந்தைகளும் இந்த அல்வாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப சூப்பரான அருமையான சுவையில் இருக்கக்கூடிய கம்மியான பொருட்கள் மட்டுமே வச்சு செய்யக்கூடிய இந்த வாழைப்பழ அல்வா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

Print
5 from 1 vote

வாழைப்பழ அல்வா | Banana Halwa Recipe In Tamil

கனிஞ்ச பழத்துல மட்டும் தான் இந்த வாழைப்பழ அல்வா செய்யணுமா அப்படின்னு கேட்டா இல்லங்க நம்ம வீட்ல வாழைப்பழம் இருந்தாலே போதும் அதை வச்சு சூப்பரா நம்ம இந்த அல்வா செஞ்சுடலாம். வாழைப்பழம் வெச்ச நம்ம மில்க் ஷேக் வாழைப்பழ அப்பம் வாழைப்பழ பேன் கேக் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிடலாம் அது எல்லாத்தையும் விட இந்த வாழைப்பழ அல்வா ரொம்ப சூப்பரான டேஸ்டியா இருக்கும். குழந்தைகளும் இந்த அல்வாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப சூப்பரான அருமையான சுவையில் இருக்கக்கூடிய கம்மியான பொருட்கள் மட்டுமே வச்சு செய்யக்கூடிய இந்த வாழைப்பழ அல்வா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Banana Halwa
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 வாழைப்பழம்
  • 100 கிராம் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கேசரி பவுடர்
  • நெய் தேவையான அளவு
  • 10 முந்திரி

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாய் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதே கடாயில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழத்தை போட்டு நன்றாக வேக வைக்கவும். இடையிடையே சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக சுருள கிளறவும்.
  • வாழைப்பழம் பாதி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் கேசரி பவுடரும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்
  • வாழைப்பழக்கலவை கடாயில் ஒட்டாதவாறு நன்றாக சுருள வந்தவுடன் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள நெய் சேர்த்து இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்

Nutrition

Serving: 100g | Calories: 192kcal | Carbohydrates: 233g | Protein: 39g | Sodium: 32mg | Potassium: 139mg

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு சூப்பரான வாழைப்பழம் குக்கீஸ் இப்படி ரெம்ப ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!