- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வாழைப்பழம் மற்றும் சாக்லேட் அருமையாக இணைந்து தரும் சுவை அலாதியாக இருக்கும். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும். இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும்.
பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து அனுப்பினால், கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள். பிஸ்கட், குக்கீஸ் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் வெளியில் கடைகளில் சென்று தான் வாங்கி சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான பட்டர் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பழம் இருந்தால் போதும் நீங்களும் இப்படி மிருதுவான கேக் செய்யலாம்! அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் வாழைப்பழம், ஓட்ஸ், மைதா மாவு, உப்பு, உலர்ந்த திராட்சை, பேக்கிங் பவுடர், பால், பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கலந்து கொள்ளவும்.
பின் பைபிங் பேக்கில் பீட் செய்த மாவை அடைத்து விரும்பிய வடிவில் செய்து அதில் சாக்கோ சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
பின் குக்கீஸ் வேக வைக்கும் தட்டில் பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி குக்கீஸை வைக்கவும்.
அதன்பிறகு 10 நிமிடங்கள் ஓவனை சூடாக்கிக் கொள்ளவும். பிறகு ஓவனில் குக்கியை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் குக்கீஸ் வெந்ததும் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆற விடவும்.
அவ்வளவுதான் சுவையான, மிருதுவான வாழைப்பழ குக்கீஸ் தயார். மாலை வேளையில் தேநீருடன் இதனை பரிமாறி மகிழலாம்.






