கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே கேக் செய்து அசத்துங்கள். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும்.
இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்யும். கோடை கால நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக மாறும். சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான்.
அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது என்றால் அந்த இன்பத்திற்கு அளவே இல்லை. சில சுவாரஸ்யமான உணவுகளை நாமே சமைத்து உள்ளது என்பது பெரும் இன்பத்தைத் தரும். இப்படி பல நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை கொண்டு கேக் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். இந்த வாழைப்பழ கேக்கை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள்.
வாழைப்பழ கேக் | banana cake recipe in tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசைக்கல்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 வாழைப்பழம்
- 1 கப் மைதா
- 1/2 கப் சர்க்கரை
- 1 முட்டை
- 1/4 கப் உருக்கிய வெண்ணெய்
- 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- உப்பு சிறிதளவு
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- 1/4 கப் முந்திரி
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
- வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அரைத்த வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தயிர், எண்ணெய், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இதனுடன் வெண்ணிலா எசன்ஸ், வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கிரீம் போல நல்ல அடித்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு இதில் சலித்து வைத்த மைதா மாவை சேர்த்து இந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கிளறி கொள்ளவும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து இந்த கலவையை ஊற்றி முந்திரிப்பருப்பை மேலே சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கலவையைக் கொட்டி வைத்துள்ள பேனை அதன் மேலே வைத்து அதனை மூடி குறைந்த தீயில் வைக்கவும்.
- அதிகபட்சம் 15 நிமிடம் வரை வேக விட்டால் பஞ்சு போல வாழைப்பழ கேக் வெந்து விடும்.
- அதனை அப்படியே மெதுவாக எடுத்து தட்டில் வைத்து வெட்டி குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.
- அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ கேக் தயார்.