Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக சுவையான வாழைப்பழம் இனிப்பு கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

மாலை நேர ஸ்நாக்ஸாக சுவையான வாழைப்பழம் இனிப்பு கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. வாழைப்பழ கட்லெட் வாழைப்பழம் கொண்டு செய்யப்படுகிறது. இதில் உங்கள் விருப்பமான காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. வாழையில் பல வகையுண்டு. செவ்வாழை, பச்சை பழம், மஞ்சள் பழம், கற்பூர வாழை, பூ பழம் என சொல்லிக்கொண்டே போகலாம். நம் வீடுகளில் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும் பழத்தில் வாழைப்பழமும் ஒன்று.

-விளம்பரம்-

பெரும்பாலும் பல வீடுகளில் ஃப்ரிட்ஜிக்கு மேல் டசன் கணக்கில் வாழைப்பழம் இருப்பதை பார்க்க முடியும். இதை ஃபிரிட்ஜில் வைக்க முடியாது அதனால் வெளியில் தான் வைப்பார்கள். தோல் கருப்பாகி, பழம் நன்கு பழத்த பின்பு குழந்தைகளை அதை சாப்பிட விரும்பமாட்டார்கள். உடனே அதை தூக்கி போடுவது தான் வழக்கம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி போட வேண்டிய அவசியம் இல்லை. பழத்த வாழை பழத்தில் இப்படியொரு அருமையான ஸ்வீட் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அது போதும். ஒருவேளை பழம் மீந்துவிட்டால் அதை தூக்கி போடாமல் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த ஸ்வீட்டை செய்து கொடுங்கள்.

பொதுவாக வாழைப்பழத்தை வைத்து பாயாசம், பஞ்சாமிருதம் போன்றவை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கமாட்டீர்கள். இதில் நாம் வாழைப்பழத்தை சேர்த்து செய்வதால் மற்ற‌ கட்லெட்டுகளை விட இவை உடம்புக்கும் நல்லது. மேலும் வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகள் கூட வாழைப்பழத்தை பயன்படுத்தி இப்படி கட்லெட்டாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். வாழைப்பழம், பொட்டுக்கடலை சேர்த்து செய்யும் இந்த கட்லெட் மிகவும் சத்தான ஸ்நாக்ஸ். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
4 from 4 votes

வாழைப்பழம் இனிப்பு கட்லெட் | Banana Sweet cutlet Recipe In Tamil

பொதுவாக வாழைப்பழத்தை வைத்து பாயாசம், பஞ்சாமிருதம் போன்றவை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கமாட்டீர்கள். இதில் நாம் வாழைப்பழத்தை சேர்த்து செய்வதால் மற்ற‌ கட்லெட்டுகளை விட இவை உடம்புக்கும் நல்லது. மேலும் வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகள் கூட வாழைப்பழத்தை பயன்படுத்தி இப்படி கட்லெட்டாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். தோல் கருப்பாகி, பழம் நன்கு பழத்த பின்பு குழந்தைகளை அதை சாப்பிட விரும்பமாட்டார்கள். உடனே அதை தூக்கி போடுவது தான் வழக்கம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி போட வேண்டிய அவசியம் இல்லை. பழத்த வாழை பழத்தில் இப்படியொரு அருமையான ஸ்வீட் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அது போதும். ஒருவேளை பழம் மீந்துவிட்டால் அதை தூக்கி போடாமல் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த ஸ்வீட்டை செய்து கொடுங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Banana cutlet
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 5 வாழைப்பழம்
  • 1/2 கப் பொட்டுக்கடலை
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 கப் வெல்லம்
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  • பின் பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காயை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வெல்லம் சேர்த்து கிளறி, அதனுடன் பொட்டுக்கடலை மாவையும், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு மசித்த வாழைப்பழத்தை போட்டு சேர்த்து சிறிது நேரம் ‌கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  • இவை நன்கு ஆறியவுடன் சிறிய உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவத்தில் தட்டி ஊத்தப்பம் கல்லில் போட்டு சிறிதளவு நெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் நல்ல மொறுமொறுப்பான வாழைப்பழம் இனிப்பு கட்லெட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 4.3g | Fat: 0.4g | Sodium: 1mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Sugar: 4.1g | Vitamin A: 6IU | Vitamin C: 17mg | Calcium: 6mg | Iron: 2mg

இதனையும்‌ படியுங்கள் : வாழைப்பழம் இருந்தால் போதும் நீங்களும் இப்படி மிருதுவான கேக் செய்யலாம்! அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!