கறி குழம்பு சுவையில் பீன்ஸ் மசாலா குழம்பு ரொம்ப ஈஸியா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

பீன்ஸ் வைத்து பலவிதமான கிரேவி வகைகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் பீன்ஸ் வைத்து கறிக்குழம்பு சுவையில் அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.இந்த குழம்பு வெரைட்டி ரைஸ், டிபன் என எல்லாவற்றிற்கும் ஏற்றதாக சுவையாக இருக்கும். தினமும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழம்பு வைக்கும் வேலை ஒரு மிகப்பெரிய வேலை. எந்த குழம்பு வைத்தாலும் ருசி இல்லை என்று சொல்லுவார்கள். ருசியாக குழம்பு வேண்டும் என்றால் இதே முறையில் இந்த பீன்ஸ் மசாலா குழம்பு செய்து பற்றுங்கள்

-விளம்பரம்-

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். .  எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்..  உடலுக்கு ஆரோக்கியமான பீன்ஸ் அதிக அளவு சமையலில் பயன்படுத்துவது கிடையாது. பெரும்பாலும் பீன்ஸ் பீன்ஸ் வைத்து பொரியல் தான் அடிக்கடி செய்வார்கள். இதில் குழம்பு  போன்றவற்றையெல்லாம் செய்வது மிகவும் குறைவு.  வாங்க பீன்ஸ் மசாலா குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

பீன்ஸ் மசாலா குழம்பு | Beans Masala Kulambu Recipe In Tamil

பீன்ஸ் வைத்து பலவிதமான கிரேவி வகைகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் பீன்ஸ் வைத்து கறிக்குழம்புசுவையில் அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்று தான்தெரிந்து கொள்ளப் போகிறோம். சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.இந்தகுழம்பு வெரைட்டி ரைஸ், டிபன் என எல்லாவற்றிற்கும் ஏற்றதாக சுவையாக இருக்கும். தினமும்வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழம்பு வைக்கும் வேலை ஒரு மிகப்பெரிய வேலை. எந்த குழம்புவைத்தாலும் ருசி இல்லை என்று சொல்லுவார்கள். ருசியாக குழம்பு வேண்டும் என்றால்இதே முறையில் இந்த பீன்ஸ் மசாலா குழம்பு செய்து பற்றுங்கள் பீன்ஸ் புற்றுநோய்செல்களை அழிக்கும். .  எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.. 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Beans Masala Kulambu
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பீன்ஸ்
  • 100 கிராம் பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1/4 கப் தேங்காய்துருவல்
  • 2 டேபிள் டீஸ்பூன் மிளகாய்பொடி
  • 1 டேபிள் டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • உப்பு தேவைக்கேற்ப அளவு
  • எண்ணெய் தேவைக்கேற்ப அளவு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை

செய்முறை

  • பட்டாணியை2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்,
  • பட்டாணியை உப்பு போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், பீன்சை தனியாக வேக வைக்கவும். தேங்காய்துருவலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்,
  • பிறகு கடாயில் எண்ணைய் ஊற்றி சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது 2 நிமிடம் வதங்கியபின் அரைத்ததக்காளி, வெங்காய விழுதை போட்டு வதக்கவும்,
  • பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இந்த கலவையுடன் பீன்சை சேர்த்து நன்றாகவதக்கவும்
  • அரைத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். வாசனைக்கு 3 பச்சைமிளகாயை கீறி போடலாம். பின்புகொத்தமல்லி தழையை தூவி, கிளறி இறக்கவும். இப்போது சுவையான பீன்ஸ் மசாலா குழம்பு ரெடி.

செய்முறை குறிப்புகள்

இது சப்பாத்தி, தோசை, இட்லிக்கு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்,

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Saturated Fat: 0.1g | Potassium: 405mg | Fiber: 2.7g | Vitamin C: 1.2mg | Calcium: 35mg | Iron: 2.2mg