பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு தடவை இந்த மாதிரி பீட்ரூட் சட்னி செஞ்சு கொடுங்க!!!

- Advertisement -

பீட்ரூட் சாப்பிட்டா ஹீமோகுளோபின் அதிகரிக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. உடம்புல ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருந்தா அதிகமான காசு செலவு பண்ணி மாத்திரை வாங்கி சாப்பிடணும் அப்படின்ற அவசியமே கிடையாது நீங்க உங்களோட உணவுல இந்த பீட்ரூட்டா அடிக்கடி சேர்த்துக்கிட்டா மட்டும் போதும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு உங்க உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அவ்வளவு ஒரு சத்துக்கள் வாய்ந்த காய் தான் இந்த பீட்ரூட்.

-விளம்பரம்-

பீட்ரூட் ரொம்ப ஈஸியா அடிக்கடி நமக்கு கிடைக்க கூடிய ஒன்னு அடிக்கடி செஞ்சு சாப்பிடணும் அப்பதான் நம்ம உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த பீட்ரூட் சாப்பிடுவதற்கு ரொம்பவே ஒரு சூப்பரான டேஸ்ட் இருக்கும். தினமும் நம்ம பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். நம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பீட்ரூட் பொரியல் பீட்ரூட் கிச்சடி பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் கூட்டு பீட்ரூட் அல்வா அப்படின்னா நம்ம நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த பீட்ரூட் சட்னி நம்ம இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம்.

- Advertisement -

ஆனா கண்டிப்பா ஒரு தடவையாவது உங்க குழந்தைகளுக்கு இந்த பீட்ரூட் சட்னி செஞ்சு குடுங்க. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க கொஞ்சம் டிஃபரண்டா சத்தான ஆரோக்கியமான இந்த காயை வைத்து சூப்பரான ஈஸியான சட்னி செஞ்சு குடுங்க. அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி இந்த பீட்ரூட் சட்னி செஞ்சு சாப்பிடுவீங்க இட்லி, தோசை சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பீட்ரூட் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

பீட்ரூட் சட்னி | Beetroot Chutney Recipe In Tamil

பீட்ரூட் ரொம்ப ஈஸியா அடிக்கடி நமக்கு கிடைக்க கூடிய ஒன்னு அடிக்கடி செஞ்சு சாப்பிடணும் அப்பதான் நம்ம உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த பீட்ரூட் சாப்பிடுவதற்கு ரொம்பவே ஒரு சூப்பரான டேஸ்ட் இருக்கும். தினமும் நம்ம பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். நம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பீட்ரூட் பொரியல் பீட்ரூட் கிச்சடி பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் கூட்டு பீட்ரூட் அல்வா அப்படின்னா நம்ம நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த பீட்ரூட் சட்னி நம்ம இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: BEETROOT CHUTNEY
Yield: 3
Calories: 58kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 5 சின்னவெங்காயம்
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் கடலை பருப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்
  • பிறகு அதை கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பீட்ரூட் துருவலையும் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக ஐந்து  நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த அனைத்துபொருட்களையும் சேர்த்து உப்பு புளி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து விட்டால் சுவையான பீட்ரூட் சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Sodium: 106mg | Potassium: 216mg | Fiber: 1.8g | Calcium: 12mg | Iron: 0.8mg