ருசியான பீட்ரூட் முட்டை பொரியல் இப்படி செய்து கொடுத்தால் சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

- Advertisement -

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் பொரியல் என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள்கூட இந்தக் காயைப் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி பீட்ரூட் பொரியலை நம் வீட்டிலேயே சுவையாக சூப்பராக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி.

-விளம்பரம்-

பீட்ரூட் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும், ஸ்டாமினாவை அதிகரிக்கும், இதயத்தை நல்ல அமைப்பில் வைத்துக் கொள்ளும், புற்றுநோயைத் தடுக்க உதவும், ஞாபக மறதியைத் தடுக்க உதவும், சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் கண்களுக்கு நல்லது. இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
5 from 1 vote

பீட்ரூட் முட்டை பொரியல் | Beetroot Egg Poriyal Recipe In Tamil

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் பொரியல் என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள்கூட இந்தக் காயைப் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி பீட்ரூட் பொரியலை நம் வீட்டிலேயே சுவையாக சூப்பராக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: beetroot egg poriyal
Yield: 4 People
Calories: 58kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 பீட்ரூட்
  • 2 முட்டை
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட் மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பீட்ரூட் சிறிதளவு வதங்கினதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் எண்ணையிலே வேக விடவும்.
  • பீட்ரூட் நன்கு வெந்ததும் முட்டை சேர்த்து கிளறி தம்மில் சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முட்டை சேர்த்த பீட்ரூட் பொரியல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 5.2g | Fat: 0.2g | Sodium: 106mg | Potassium: 442mg | Fiber: 3.8g | Vitamin A: 4IU | Vitamin C: 4.9mg | Calcium: 22mg | Iron: 2.09mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான பீட்ரூட் இனிப்பு அடை இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க நிறையவே பீட்ரூட் சாப்பிடுவாங்க!