குக் வித் கோமாளியில் சந்தோஷ் செய்த பீட்ரூட் அல்வா இப்படி செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. இந்தியாவை தவிர இவை வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானிலும் பிரபலம். இது சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. பொதுவாக பீட்ருட்டை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளை ஏன் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும். பெரியவர்கள் கூட சிலர் சாப்பிடமாட்டாட்கள்.

-விளம்பரம்-

உங்கள் வீட்டில் பீட்ரூட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி. அதோடு இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களை அசத்திவிடலாம். வழக்கமாக நாம் வீட்டின் விஷேச தனிங்களில் பாயசம், கேசரி என்று தான் அதிகமாக செய்து சுவைத்து இருப்போம்.

- Advertisement -

இனி வீட்டின் விஷேச தினங்களில் அல்வாவை மிக சுலபமாக செய்து அசத்துங்க. அல்வா என்றவுடன் பெரும்பாலும் நம்மில் பலருக்கும் நினைவில் வருவது கோதுமை அல்வா , பிரெட் அல்வா தான். அதை தவிர கேரட், பீட்ரூட், கொய்யா அல்வா என்று நாம் காய்கறிகளை வைத்தும் சுவையான அல்வா செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் குக் வித் கோமாளியில் சந்தோஷ் செய்த சத்தான பீட்ரூட் அல்வா எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.

Print
3.67 from 3 votes

பீட்ரூட் அல்வா | Beetroot halwa recipe in tamil

பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Halwa
Yield: 5 People
Calories: 58kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய பீட்ரூட்
  • சர்க்கரை தேவையான அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 5 டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி

செய்முறை

  • முதலில் பீட்ருட்டை நன்கு கழுவி விட்டு தோல் சீவி பொடியாக நறுக்கிய வைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பீட்ருட்டை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் வடிகட்டி மூலம் பீட்ருட் ஜூஸை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம்‌‌ எடுத்து வைத்துள்ள பீட்ரூட் ஜூஸை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து சர்க்கரை சேர்த்து அது கரையும்‌ வரை கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு பவுளில் கார்ன் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • பின் கரைத்து வைத்த கார்ன்‌ மாவை பீட்ருட்டுடன் சேர்த்து கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும். இது இறுகி வரும் வரை கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும். இது இறுகி அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் சிறிய கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா சேர்த்து வறுத்து அல்வாவுடன் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ருட் அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Fat: 0.2g | Sodium: 78mg | Potassium: 325mg | Fiber: 3.8g | Vitamin C: 4.9mg | Calcium: 16mg | Iron: 0.8mg