பீட்ரூட் வைத்து பொரியல், வறுவல் செய்யலாம்.. பீட்ரூட் வைத்து பக்கோடா கூட செய்யலாம். பீட்ரூட் பக்கோடா கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி உங்களுக்காக. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அருமையான இந்த பக்கோடா வெறும் பத்தே நிமிடத்தில் சுட்டு எடுத்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஹெல்தி ஸ்நாக்ஸ் ரெசிபி உங்களுக்காக.
பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பீட்ரூட் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த பீட்ரூட் சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. பீட்ரூட் மட்டும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படி பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த உணவாகவே மாற்றி சமைத்து தந்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் பீட்ரூட் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பீட்ரூட் பக்கோடா | Beetroot Pakoda Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 பீட்ரூட்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 பெரிய வெங்காயம்
- கொத்தமல்லி சிறிது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பீட்ரூட்டின் உள்ள தோலை மெல்லியதாக நீக்கி விட்டு நன்கு துருவி கொள்ளவும்.
- பின்பு பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டுகளின் தோல் நீக்கிய பின், அவற்றை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மேலும் மிக்சி ஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பிறகு மற்றோரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு, அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மெண்மையாக, கெட்டியாக பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- அதன் பின்னர் அடுப்பில் கடாயை வைத்து. அதில் பொரிக்க தேவைகேற்ப எண்ணெய் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும்.
- இறுதியில்பிசைந்த மாவு கலவையை, சிறிது சிறிதாக மாவுகளை எடுத்து, கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்கு வெந்ததும்,பொரித்து எடுந்து பரிமாறினால் ருசியான பீட்ரூட் பக்கோடா ரெடி.