பீட்ரூட்,பாலக் கீரை உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கீரையும் காய்கறி. பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் இதை விரும்பி சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாலக் கீரை பீட்ரூட் இவைகளை வைத்து சூப்பரான ஒரு வெரைட்டி ரைஸ் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். விருப்பமாக ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சாப்பிடுவாங்க. குறிப்பாக லஞ்ச் பாக்ஸில் கட்டிக்கொடுக்க இது ஒரு அருமையான ரெசிபி. அட இப்படி செய்து கொடுத்தால் யாரு தான் பீட்ரூட் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட் , கீரை வகைகள் என்று சொன்னாலே பத்தடி தூரம் தள்ளி செல்வார்கள். அவர்களுக்கு எப்படியாவது கொஞ்சம் பாலக் கீரையையும் பீட்ரூட்டையாவது சாப்பிட கொடுத்த விட வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படி பீட்ரூட் பாலக் ரைஸ் செய்து கொடுங்கள். ஆரோக்கியம் நிறைந்த சாப்பாடு, ருசி நிறைந்த சாப்பாடு, இல்லத்தரசிகளுக்கு மன திருப்தியை கொடுக்கக்கூடிய சாப்பாடு இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
பீட்ரூட் பாலக் ரைஸ் | Beetroot Palak Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 பீட்ரூட்
- 2 கைப்பிடி பாலக்
- 1 ஆழாக்கு அரிசி
- 1/4 டம்ளர் துவரம் பருப்பு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 பல் பூண்டு
- 1 தேக்கரண்டி தனியா தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவைக்கேற்ப
தாளிக்க
- கடுகு
- சீரகம்
- பெருங்காயத் தூள் சிறிது
- கறிவேப்பிலை
செய்முறை
- பீட்ரூட்டை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.பாலக் கீரையை ஆய்ந்து, நறுக்கி கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அரிசி மற்றும் பருப்பை களைந்து வைக்கவும்.
- குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு.சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் பீட்ரூட் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
- இதனுடன் பாலக் கீரையை சேர்த்து கிளறவும்.இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.பின்னர் இதனை மூடி 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் பாலக் ரைஸ் தயார்.