- Advertisement -
முன்பெல்லாம் , பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள், பிள்ளைகளுக்கு செய்வதெல்லாம் ஒரு விசயமே இல்லை. முறுக்கு, தட்டை, சீடை, இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை திண்பண்டம் தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம். இதில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான். வீட்டிலே எல்லாம் செய்து வைக்கும் அளவிற்கு இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம் இருப்பதில்லை என்றாலும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒன்று தான் பொட்டுக்கடலை வைத்து செய்யக்கூடிய இந்த இனிப்பு திண்பண்டம். இதை செய்ய அதிக நேரம் ஆகாது அதே நேரத்தில் அதிக செலவும் கிடையாது.
-விளம்பரம்-
பொட்டுக்கடலை இனிப்பு | Bengal Gram Sweet In Tamil
முன்பெல்லாம் , பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள், பிள்ளைகளுக்கு திண்பண்டம் செய்வதெல்லாம் ஒரு விசயமே இல்லை. முறுக்கு, தட்டை, சீடை, இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை திண்பண்டம் தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம். இதில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான். வீட்டிலே எல்லாம் செய்து வைக்கும் அளவிற்கு இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம் இருப்பதில்லை என்றாலும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒன்று தான் பொட்டுக்கடலைவைத்து செய்யக்கூடிய இந்த இனிப்பு திண்பண்டம். இதை செய்ய அதிக நேரம் ஆகாது அதே நேரத்தில் அதிக செலவும் கிடையாது. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்,
Yield: 4
Calories: 88kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் பொட்டுக்கடலை
- 1 கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்
- 1/2 கப் தண்ணீர்
- 1/4 கப் நெய்
- பொடித்த முந்திரி , பாதாம் தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸி ஜாரில் சன்னமாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஸ்டவ்வில் கடாயை வைத்து ஒரு கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும்.
- அதில்அரை கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும் நாட்டு சக்கரை கரைந்த உடன் பொடித்து வைத்த பொட்டுக்கடலை மாவை அதில் சேர்க்கவும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் , சிறுது சிறிதாக நெய் சேர்த்து சேர்த்து கலக்கவும், நெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும் வரை கலந்து விடவும் பொட்டுக்கடலையை வைத்து ஒரு ஆரோக்கியமான திண்பண்டம் தயார்.
செய்முறை வீடியோ
Nutrition
Serving: 50g | Calories: 88kcal | Carbohydrates: 19g | Protein: 1.8g | Fat: 0.2g | Vitamin A: 87IU | Vitamin C: 4.6mg | Calcium: 24mg | Iron: 0.6mg
- Advertisement -