இனிப்புகள் என்றாலே பொதுவாக உணவுப் பிரியர்களுக்கு மட்டும் அன்றி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக சில இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி. அந்தப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா. குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இவை கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று கூறுகிறார்கள். நாம் பொதுவாக வீட்டில் ரவா லட்டு, கேசரி , ரவை குளோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை தான் அதிகம் செய்திருப்போம்.
இதனையும் படியுங்கள் :குஜராத் ஸ்பெஷல் தித்திக்கும் சுவையான பாசந்தி ஸ்வீட்! இப்படி செய்து பாருங்க!
இதனை தவிர வேற இனிப்புகள் எனில் வெளியில் உள்ள கடைகளில் தான் வாங்குவோம். ரசகுல்லா, ரசமலாய் போன்ற இனிப்பு வகைகளை கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைப்போம். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெங்கால் ரசகுல்லா | Bengal Rasagulla Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பால் பாத்திரம்
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 லிட்டர் பால்
- 1 டேபிள் ஸ்பூன் வினிகர்
- 1 டீஸ்பூன் மைதா
- 1 கப் சர்க்கரை
- 3 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் ஏலக்காய்
- 1 டீஸ்பூன் குங்குமப்பூ
செய்முறை
- முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- பாலுடன் வினிகர் சேர்த்து கலந்து விடவும். பால் திரிய ஆரம்பிக்கும் அப்போழுது அடுப்பை அனைத்து விடவும்.
- பின்னர் திரிந்த பாலை எடுத்து ஒரு துணியில் ஊற்றி, கட்டி அரை மணி நேரம் தொங்க வைக்கவும். அப்போது பஞ்சு போன்ற கோவா கிடைத்து விடும்.
- அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து நன்கு பிசையவும். அதில் ஒரு டீஸ்பூன் மைதா மாவு, ஒரு சொட்டு மஞ்சள் கலர் ஜெல் சேர்த்து நன்கு பிசையவும்.
- பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி தயாராக வைக்கவும்.
- பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- அத்துடன் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும். அப்போது ரசகுல்லா செய்ய சுகர் சிரப் தயார்.
- பின்னர் அதில் தயார் செய்து வைத்துள்ள ரசகுல்லா உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும். நன்கு உருண்டை பெரிய வடிவில் வரும். அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
- தயாரான ரசகுல்லாக்களை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, குங்குமப்பூ வைத்து அலங்கரிக்கவும்.
- இப்போது மிகவும் சுவையான பஞ்சு போன்ற மிருதுவான, குங்குமப்பூ மணத்துடன் பெங்கால் ராசகுல்லா தயார்.