மொறு மொறுன்னு சூப்பரான பெங்காலி அரிசி பருப்பு பகோடா இப்படி செஞ்சு பாருங்க. இதோட சுவை சூப்பராக இருக்கும்!!!

- Advertisement -

நம்ம நிறைய பக்கோடா சாப்பிட்டு இருப்போம். பக்கோடா எல்லாமே கடலை மாவுல தான் பண்ணி இருக்கோம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற பக்கோடா பெங்காலி ஸ்டைல்ல அரிசி பருப்பு எல்லாம் சேர்ந்து வீட்ல சூப்பரா அரைச்சு செய்யப்போற ஒரு பக்கோடா. இந்த பக்கோடா ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த பக்கோடா தான் நம்ம எந்த ஷேப்ல வேணாலும் போட்டுக்கலாம். வடை மாதிரி தட்டியும் போட்டுக்கலாம். உருண்டை உருண்டையாவும் பால்ஸ் மாதிரி உருட்டிக்கலாம். இல்லை நீளமா ஃபிங்கர்ஸ் மாதிரியும் செயது பொரிச்சி எடுத்துக்கலாம்.

-விளம்பரம்-

இந்த பக்கோடா அப்படிங்கறது உங்களுக்கு விருப்பப்பட்ட மாதிரியான வடிவத்தில் தான் இருக்கும். இந்த பக்கோடா ரொம்பவே டேஸ்டா இருக்குறது மட்டும் இல்லாம ரொம்பவே ஹெல்தியானது. வீட்டிலேயே வறுத்து அரைத்து நாம் செய்யப்போறதுனால இந்த பெங்காலி ஸ்டைலில் அரிசி பருப்பு பக்கோடா ரொம்பவே ஆரோக்கியமான ஒரு பக்கோடா இருக்க போகுது. அதுவும் நீங்க இந்த மாதிரி செய்து கொடுக்கும்போது குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் இந்த மழை டைம்ல நீங்க ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்ய மாட்டீங்களா ஏதாவது சூடா சாப்பிட மாட்டோமா அப்படின்னு பீல் பண்ணிட்டு இருக்காங்கனா. அவங்களுக்கு நீங்க இந்த மாதிரி சுட சுட பக்கோடா செய்து கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

நீங்க செய்த உணவுக்கான பாராட்டும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். அதிலேயே நீங்கள் வித்தியாசமா வேற வேற ஊர்களில் செய்கிற மாதிரியான உணவு வகைகளை சிற்றுண்டிகள் செய்து கொடுக்கும் போது ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான அரிசி பருப்பு பக்கோடா அதிக அளவு புரதச்சத்து நிறையவே இருக்கும். கார்போஹைட்ரேட் சேர்ந்திருக்கும் காரணம் பருப்பு சேர்த்து செய்வதினால் அதில் இருக்கிற புரதச்சத்து நமக்கு அப்படியே கிடைக்கும். அது மட்டும் இல்லாம அதோட டேஸ்ட்டும் ரொம்பவே அருமையா இருக்கும். சரி வாங்க இந்த பெங்காலி ஸ்டைல் அரிசி பருப்பு பகோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பெங்காலி அரிசிபருப்பு பகோடா | Bengali Arisiparuppu Pakkoda

நம்ம நிறைய பக்கோடா சாப்பிட்டு இருப்போம். பக்கோடா எல்லாமே கடலை மாவுல தான் பண்ணி இருக்கோம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற பக்கோடா பெங்காலி ஸ்டைல்ல அரிசி பருப்பு எல்லாம் சேர்ந்து வீட்ல சூப்பரா அரைச்சு செய்யப்போற ஒரு பக்கோடா. இந்த பக்கோடா ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த பக்கோடா தான் நம்ம எந்த ஷேப்ல வேணாலும் போட்டுக்கலாம். வடை மாதிரி தட்டியும் போட்டுக்கலாம். உருண்டை உருண்டையாவும் பால்ஸ் மாதிரி உருட்டிக்கலாம். இல்லை நீளமா ஃபிங்கர்ஸ் மாதிரியும் செயது பொரிச்சி எடுத்துக்கலாம்.
Prep Time15 minutes
Active Time9 minutes
Total Time24 minutes
Course: Side Dish, snacks
Cuisine: Bengali
Keyword: Bread Chees Pakkoda, Cabbage Pakoda, chicken pakoda, Pakkoda Kulambu
Yield: 5 people
Calories: 357kcal
Cost: 50

Equipment

 • 1 மிக்ஸி
 • 1 வாணலி
 • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

 • 1 கப் பச்சரிசி
 • 1/4 கப் கடலைப்பருப்பு
 • 1/4 கப் பாசிப்பருப்பு
 • 1 உருளைகிழங்கு
 • 1 வெங்காயம்
 • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
 • 1/2 ஸ்பூன் சீரகதூள்
 • 1 ஸ்பூன் மல்லிதூள்
 • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
 • 1/4 ஸ்பூன் கரமசாலா
 • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
 • சிறிதளவு கஸ்தூரி மேத்தி
 • தேவையான அளவு உப்பு                             
 • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

 • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் அரிசியை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • வறுத்து எடுத்து வைத்துள்ள அரிசி, கடலைப்பருப்பு, பாசி பருப்பு ஆறிய பிறகு அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு கொடுத்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொடியாக துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வெங்காயம் , கொத்தமல்லி தழைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்துக்கொண்டு இறுதியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • பிறகு சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கட்டியாக மாவை பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை தங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பெங்காலி ஸ்டைல் அரிசி பருப்பு பக்கோடா தயார்.

Nutrition

Calories: 357kcal | Carbohydrates: 31.7g | Protein: 4.9g | Fat: 23.4g