ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தி பெற்ற உணவுகள் பல இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மும்பை நகரின் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண உள்ளோம். மும்பை ஸ்ட்ரீட் புட்களில் ஒன்றான பேல் பூரியை இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால், அதில் இருக்கும் சுவை நாக்கில் தாண்டவமாடும்.
இந்த பேல் பூரியானது மும்பையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நாடு முழுவதும் உள்ள இண்டு இடுக்குகளிலும் கிடைக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக உருமாறியுள்ளது. அரிசி பொரி, சேவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிகுந்த சட்னி ஆகியவற்றின் கலவையாக இருக்கும் இவை சாப்பிடுபவர்களுக்கு ஒரு வித புத்துணர்ச்சியை தருகிறதென்றால் மறுக்க முடியாது. இந்தக் கலவையோடு இன்னும் சிலர் தயிர் மற்றும் பப்படம் ஆகியவற்றையும் சேர்த்து வேற லெவல் ருசியோடு சுவைப்பார்கள்.
இவ்வளவு சமாச்சாரங்கள் சேர்த்து இந்த ஸ்நாக்ஸ் தயார் செய்யப்பட்டாலும், குறைந்த அளவான கலோரிக்கள் மட்டுமே நிறைந்திருப்பதால் டயட் போன்ற உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பேல் பூரியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள். இது வழக்கமாக நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த ரெசிபியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை இருக்கும். வாருங்கள்! ருசியான பேல் பூரியை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
ரோட்டுக்கடை பேல் பூரி | Bhel Puri Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் அரிசிபொரி
- 10 பானி பூரி
- 1 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 1 கேரட்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் இனிப்பு சட்னி
- 2 டேபிள் ஸ்பூன் பச்சை சட்னி
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- 4 டேபிள் ஸ்பூன் ஓமப்பொடி
- 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசிபொரியை சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் வெங்காயம், தக்காளி, மல்லி இலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
- பானி பூரியை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் ஓமப்பொடி, மஞ்சள் தூள், வேர்க்கடலை, பொட்டுக்கடலை வறுத்த பொரி எல்லாம் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வறுத்து வைத்துள்ள பொரியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இனிப்பு சட்னி, பச்சை சட்னி எல்லாம் சேர்த்து நன்கு கலந்து அத்துடன் பானி பூரிகளை பொடித்து போட்டு நன்கு கலந்து விடவும்.
- அதன்பிறகு எலுமிச்சை சாறு பிழிந்து, ஓமப்பொடி, மல்லி இலைகளை அதன்மேல் தூவினால் பேல் பூரி தயார். இந்த பேல் பூரி குளிர் காலத்தில் சாப்பிட மிகவும் பொருத்தமான ஒரு சாட்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான பானி பூரி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!