பாகற்காய் சம்பல் சாதத்திற்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும்!!!

- Advertisement -

பாகற்காய் என்றாலே அதன் கசப்பு தன்மை காரணமாக யாருக்குமே பிடிக்காது. ஒரு சிலர் மட்டுமே பாகற்காயை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் பாகற்காயில் ஏராளமான நன்மைகளும் ஆரோக்கியங்களும் நிறைந்துள்ளது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தமாக்கும். வயிற்றில் புண் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பாகற்காய் அதனை குணப்படுத்தும் அந்த அளவிற்கு ஒரு ஆரோக்கியம் நிறைந்த காய் தான் பாகற்காய்.

-விளம்பரம்-

இந்த பாகற்காயில் நிறைய வெரைட்டிஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். பாகற்காய் புளிக்குழம்பு பாகற்காய் பொரியல் என செய்திருப்போம் அவை அனைத்தும் சிறிய குழந்தைகளுக்கு பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயமாக பிடிக்காது. அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி சுவையாக செய்து கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களும் சாப்பிட பழகுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இதனுடைய கசப்பு தன்மை காரணமாக அவர்களது உடல் சுத்தமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இந்த பாகற்காயை சாப்பிட வேண்டும்.

- Advertisement -

குழந்தைகளுக்கும் நாம் சிறு வயதிலிருந்தே பாகற்காயை கொடுத்து பழக பொதுவாக நாம் ஒரு நாளில் அனைத்து வகையான சுவைகளையும் ருசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எல்லா சுவையும் நமக்கு பிடிக்கும். கசப்பு என்றால் மட்டும் பலருக்கு பிடிக்காது ஆனால் அதையும் நாம் பழகிக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழ முடியும். இப்பொழுது நாம் அனைவருக்கும் பிடித்த வகையில் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடக்கூடிய பாகற்காய் சம்பல் செய்யப் போகிறோம். இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும் சாப்பிடாதவர்கள் கூட இதனை சாப்பிட்டால் பாகற்காய் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்து விடும் வாருங்கள் இந்த பாகற்காய் சம்பல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பாகற்காய் சம்பல் | Bitter Gourd Sambal Recipe In Tamil

பாகற்காயில் நிறைய வெரைட்டிஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். பாகற்காய் புளிக்குழம்பு பாகற்காய் பொரியல் என செய்திருப்போம் அவை அனைத்தும் சிறிய குழந்தைகளுக்கு பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயமாக பிடிக்காது. அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி சுவையாக செய்து கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களும் சாப்பிட பழகுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இதனுடைய கசப்பு தன்மை காரணமாக அவர்களது உடல் சுத்தமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இந்த பாகற்காயை சாப்பிட வேண்டும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Bitter Gourd Sambal
Yield: 4
Calories: 63kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய்த் தூள்
  • கருவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

  • முதலில் பாகற்காயை நன்கு கல்வி சுத்தம் செய்து உங்களுக்கு பிடித்த மாதிரி அதனை வெட்டி வைத்துக் கொள்ளவும். பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து அரை மணி நேரம்அப்படியே வைத்து விடவும்.
  • அரை மணி நேரம்கழித்து பாகற்காயில் உள்ள தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பத்து நிமிடங்கள் நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • மறுபடியும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரியவெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும். இப்போது பொரித்துவைத்துள்ள பாகற்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்
  • மறுபடியும் ஒரு பத்து நிமிடத்திற்கு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்றாக வேக விடவும்.
     
  • அனைத்தும் வெந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான நிறைய கசப்பு தன்மை இல்லாத பாகற்காய்சம்பல் தயார். இதனை சாதத்திற்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 63kcal | Carbohydrates: 5.4g | Potassium: 296mg | Vitamin A: 471IU

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பாகற்காய் முட்டை புர்ஜி ஒரு முறை மட்டும் இப்படி செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!