அபாரமான ருசியில் அவிச்ச முட்டை தோசை இந்த முறையில் செய்து சாப்பிடுங்க, டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

- Advertisement -

தோசைகளில் பல வெரைட்டிகள் இருந்தாலும் எல்லாருக்கும் முட்டை தோசை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அப்படி முட்டை தோசை அப்படின்னா நம்ம ஒடச்சு ஊத்துற முட்டை தோசை தான் நிறைய பேர் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற முட்டை தோசை அவிச்சு முட்டையை வைத்து தோசை ஊத்த போறோம்.

-விளம்பரம்-

அவிச்ச முட்டை வச்சு எப்படிப்பா தோசை ஊத்தறது அப்படின்னு கேட்டீங்கன்னா அதுக்கான பதில் கீழ இனிமே எப்படி செய்ய போறோம் அப்படிங்கறது எல்லாம் இருக்கு. சுவையான ருசியான இந்த அவிச்ச முட்டை தோசை. காலை  உணவிற்கும் இரவு உணவிற்கும் இந்த அவிச்சு முட்டை தோசை ரொம்பவே நல்லா இருக்கும். அப்படி இந்த முட்டை தோசை இல்ல என்ன ஸ்பெஷல் இருக்கு அப்படின்னு நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம்.

- Advertisement -

இந்த சுவையான முட்டை தோசை எல்லாருக்குமே பிடிக்கும். இப்ப நம்ம செய்ய போற முட்டை தோசை முட்டை மசாலா சாதத்துக்கு கூட சாப்பிட்டுக்கலாம். ஆனா நம்ம இப்ப அந்த அவிச்ச முட்டை வச்சு முட்டை தோசை செய்து ரொம்ப சுவையா சாப்பிட போறோம். இந்த முட்டை தோசைக்கு சட்னி சாம்பார் எல்லாம் தேவையே கிடையாது. தோசையில இருக்கிற முட்டையிலேயே வைத்து நம்ம இதை தொட்டு சாப்பிட்டுக்கலாம்.  வாங்க எப்படி இந்த அவிச்ச முட்டை தோசை செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
3.50 from 2 votes

அவிச்ச முட்டை தோசை | Boiled Egg Dosa Recipe In Tamil

சுவையான முட்டை தோசை எல்லாருக்குமே பிடிக்கும். இப்ப நம்ம செய்ய போற முட்டை தோசை முட்டை மசாலா சாதத்துக்குகூட சாப்பிட்டுக்கலாம். ஆனா நம்ம இப்ப அந்த அவிச்ச முட்டை வச்சு முட்டை தோசை செய்துரொம்ப சுவையா சாப்பிட போறோம். இந்த முட்டை தோசைக்கு சட்னி சாம்பார் எல்லாம் தேவையேகிடையாது. தோசையில இருக்கிற முட்டையிலேயே வைத்து நம்ம இதை தொட்டு சாப்பிட்டுக்கலாம். வாங்க எப்படி இந்த அவிச்ச முட்டை தோசை செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Boiled Egg Dosa
Yield: 4

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் தோசைமாவு
  • 4 முட்டை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் கரமசாலா
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையைஅவித்து முட்டை ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஓடு உரித்துவைத்துள்ள முட்டைகளை கையால் கலந்து கொள்ள வேண்டும்.
  •  
    கலந்து வைத்துள்ள முட்டைகளில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்ந்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் மிளகுத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இறுதியாக அதில் கொத்தமல்லி தழை  தூவி, உப்பு சேர்த்துநன்றாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதில் கலந்து வைத்துள்ள முட்டை மசாலா சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசையை ஊற்றி வறுத்தெடுத்து வைத்துள்ள முட்டை மசாலாவை தோசை மேல் தூவி மூடி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான அவித்த முட்டை தோசை தயார்.