எப்பவுமே இட்லி தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு போர் அடிக்குதா அப்போ இந்த பாம்பே சட்னி ரெசிபி உங்களுக்காக தான்!!!

- Advertisement -

பாம்பே சட்னியா அப்படின்னா என்ன அப்படின்னா நிறைய பேர் யோசிச்சிட்டு இருப்பீங்க. பாசிப்பருப்பு வச்சு செய்யக்கூடிய சட்னி தான் பாம்பே சட்னி அப்படின்னு சொல்லுவாங்க பாசிப்பருப்புல சாம்பார் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.பாசிப்பருப்பு அல்வா கூட செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இந்த பாம்பே சட்னி கண்டிப்பா நிறைய பேரு சாப்பிட்டு இருக்க மாட்டோம் பாசிப்பருப்புல சாம்பார் வச்சி இட்லி கூட ஊத்தி சாப்பிட்டாலே அவ்வளவு டேஸ்டா இருக்கும் அதிலேயே நம்ம சட்னி செஞ்சு சாப்பிட்டா இன்னும் மணக்க மணக்க ரொம்ப டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

நம்ம வீட்ல அடிக்கடி காலை உணவாகவும் இரவு உணவாகவும் செய்யக்கூடியது இட்லி தோசை தான்‌. அந்த இட்லி தோசைக்கு தினமும் வெரைட்டியா ஏதாவது சட்னி குழம்பு குட் மார்னிங் சாப்பிட்டாதான் கொஞ்சம் சாப்பிட நல்லா இருக்கும் எப்பவும் போல ஒரே மாதிரியா தேங்காய் சட்னி தக்காளி சட்னி, காரச் சட்னி, சாம்பார்ல செஞ்சா கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்யும் அப்படி உங்களுக்கு போரடிக்கும் போது இந்த பாம்பே சட்னி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் தேங்காய் சட்னி தக்காளி சட்னி மாறி இந்த பாம்பே சட்னியும் நீங்க உங்க வீட்ல அடிக்கடி செய்து சாப்பிடுவீங்க.

- Advertisement -

இதோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் அதே நேரத்துல ரொம்ப ஈஸியாவும் இதை செஞ்சு முடிச்சிடலாம். குழந்தைகளுக்கு ஒரு வேலை இந்த மாதிரி டிபன் பாக்ஸ்க்கு இட்லி தோசை என்ன செஞ்சு கொடுத்தா தக்காளி சட்னி மட்டும்தான் வைத்து கொடுப்போம் தேங்காய் சட்னி கெட்டுப் போயிடும் அப்போ எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி சட்னியே வச்சுவிடாம ஒரு தடவை இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்ச டிபன் பாக்ஸில் வைத்து விடுங்கள் சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது குழந்தைங்க டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் ரொம்பவே ரசிச்சு சாப்பிட்டு முடித்து இருப்பாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 1 vote

பாம்பே சட்னி | Bombay Chutney Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஒரு வேலை இந்த மாதிரி டிபன் பாக்ஸ்க்கு இட்லி தோசை என்ன செஞ்சு கொடுத்தா தக்காளி சட்னி மட்டும்தான் வைத்து கொடுப்போம் தேங்காய் சட்னி கெட்டுப் போயிடும் அப்போ எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி சட்னியே வச்சுவிடாம ஒரு தடவை இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்ச டிபன் பாக்ஸில் வைத்து விடுங்கள் சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது குழந்தைங்க டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் ரொம்பவே ரசிச்சு சாப்பிட்டு முடித்து இருப்பாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Bombay Chutney
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாசிப்பருப்புகாய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தும் நன்றாக வதங்கி பிறகு அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற ருசியான முருங்கைக்கீரை பொரியல் இப்படி செய்து பாருங்க!