‘பாம்பே கராச்சி அல்வா’ இனி கடையில் வாங்க வேண்டாம்! கான்பிளவர் மாவு இருந்தாலே போதும் சட்டுனு அனைவரும் விரும்பும் அல்வா செஞ்சிடலாம்!!!

- Advertisement -

அனைவரும் விரும்பும் இந்த பாம்பே கராச்சி அல்வா ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்றாக இருக்கிறது. ஒரு கப் கார்ன்ஃப்ளவர் மாவு இருந்தாலே சட்டுனு செய்து அசத்திடலாம். மேலும் இதனுடைய சுவைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ரெடி ஆவதற்குள், இந்த ஸ்நாக்ஸ் ரெடி ஆகிடும்.

-விளம்பரம்-

சுலபமான, சுவையான, ஒரு சிம்பிள் ஈவினிங் ஸ்நாக்ஸ் தாங்க இது.ரொம்ப ரொம்ப சுலபமாக அல்வா! இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். நீங்களும் இதே மாதிரி செஞ்சு கொடுத்து அசத்திடுங்க.

- Advertisement -

சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய அளவிலான ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கக்கூடிய இந்த பாம்பே கராச்சி அல்வா ஆரோக்கியமான முறையில் எப்படி நம் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Print
5 from 1 vote

பாம்பே கராச்சி அல்வா | Bombay Karaachi Halwa In Tamil

சுவையான, ஒரு சிம்பிள் ஈவினிங் ஸ்நாக்ஸ் தாங்கஇது.ரொம்ப ரொம்ப சுலபமாக அல்வா! இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்துருசித்து சாப்பிடுவார்கள். நீங்களும் இதே மாதிரி செஞ்சு கொடுத்து அசத்திடுங்க.சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய அளவிலான ஸ்வீட்ஸ்டால்களில் கிடைக்கக்கூடிய இந்த பாம்பே கராச்சி அல்வா ஆரோக்கியமான முறையில் எப்படிநம் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Bombay Karaachi Halwa
Yield: 4
Calories: 58kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சோள மாவு
  • 2 கப் சர்க்கரை
  • 1 பின்ச் ஃபுட் கலர்
  • நெய் தேவையான அளவு
  • பொடித்த பாதாம், முந்திரி,

செய்முறை

  • பாம்பே கராச்சி அல்வா செய்வதற்கு முதலில் ஒருகப் அளவிற்கு சோள மாவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சோள மாவிற்கு இரண்டு கப் அளவிற்குதண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீரை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு கப் சர்க்கரைக்கு, ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.
  • சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்கும் பொழுது, விருப்பட்ட ஃபுட் கலர் சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்தால் போதும்
  • பின்னர் நீங்கள் கரைத்து வைத்துள்ள சோள மாவுகரைசலை உள்ளுக்கு சேர்க்க வேண்டும். இப்போது இடைவிடாமல் நீங்கள் சோளமாவை கிண்டி விடுங்கள்.ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். நெய் வாசம் பிடித்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து விடுங்கள்.
  • அல்வா பதத்திற்கு மாவு கெட்டியாக திரண்டு வரும். பத்து நிமிடம் இது போல கலந்து விட்டால் பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா போல ஸ்டிக்கியாகவரும்.
  • இந்த சமயத்தில் நீங்கள் குட்டி குட்டியாக பொடிபொடியாக நறுக்கி வைத்துள்ள உங்கள் விருப்பமான நட்ஸ் வகைகளை தூவிக் கொள்ளுங்கள். பாதாம்,முந்திரி, பிஸ்தா, வால்நட், பூசணி விதைகள் என்று எந்த நட்ஸ் வகைகளையும் நீங்கள் சேர்க்கலாம். ரொம்பவே சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். பிறகு எல்லாவற்றையும் நன்கு கலந்து சூட்டுடன்ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் மேற்புறமாக பரவலாக ஒரே மாதிரியாக இருக்கும்படிகரண்டியால் அழுத்தம் கொடுத்து பரப்பி விடுங்கள். அரை மணி நேரம் நன்கு ஆறிய பின்பு வேறொரு பாத்திரத்தில் தலைகீழாக கொட்டினால் அல்வா போல வந்து விழும். இதை உங்கள் விருப்பமான ஷேப்களில் நீங்கள் கத்தியை கொண்டு வெட்டி வைத்துக் கொள்ளலாம்.
  • சுவையான பாம்பே கராச்சி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Fat: 0.2g | Sodium: 78mg | Potassium: 325mg | Fiber: 3.8g | Vitamin C: 3.8mg | Calcium: 16mg | Iron: 0.8mg

இதையும் படியுங்கள் : தேங்காய் பால் கோதுமை அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!