கல்யாண வீட்டு பிரெட் ஹல்வா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

bread halwa
- Advertisement -

ஹல்வா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் ஹல்வா. ஹல்வா என்றாலே நிறைய வகையில் செய்வார்கள். அதிலும் கல்யாண வீடுகளில் தரப்படும் பிரெட் ஹல்வா இருக்கே அட அட என்ன சுவை வாயில் வைத்த உடனே கரைந்து போகும்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரையும் சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி ?

- Advertisement -

அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் அங்கு விருப்பப்படி நிறைய சாப்பிட முடியாது. இனி அந்த கவலை வேண்டாம். நம் வீட்டிலேயே சுலபமாக எப்படி பிரெட் ஹல்வா செய்வது அதுவும் கல்யாண வீட்டு டேஸ்டில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

bread halwa
Print
5 from 1 vote

பிரெட் ஹல்வா | Bread Halwa Recipe In Tamil

ஹல்வா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் ஹல்வா. ஹல்வா என்றாலே நிறைய வகையில் செய்வார்கள். அதிலும் கல்யாண வீடுகளில் தரப்படும் பிரெட் ஹல்வா இருக்கே அட அட என்ன சுவை வாயில் வைத்த உடனே கரைந்து போகும் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் அங்கு விருப்பப்படி நிறைய சாப்பிட முடியாது. இனி அந்த கவலை வேண்டாம். நம் வீட்டிலேயே சுலபமாக எப்படி பிரெட் ஹல்வா செய்வது அதுவும் கல்யாண வீட்டு டேஸ்டில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time21 minutes
Course: Snack, sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: bread halwa, பிரெட் ஹல்வா
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • பிரெட் தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 2 ஸ்பூன் நெய் தேவையான அளவு
  • 15 முந்திரி
  • 1 கப் சர்க்கரை
  • ஏலக்காய் பொடி கொஞ்சம்
  • வெள்ளரி விதை சிறிதளவு

செய்முறை

  • முதலில் பிரெட்டை ஓரங்களில் கட் பண்ணி எடுத்து இரண்டாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கேட் பண்ண பிரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி பருப்புகளை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே வாணலில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்துள்ள ப்ராடுகளை சேர்த்து நன்கு கரண்டியால் மசித்துக்கொள்ளவும்.
  • அல்வா பதத்திற்கு வந்தவுடன் வருதுவைத்துள்ள முந்திரி சேர்த்து அத்துடன் ஏலக்காய் பொடி, வெள்ளரி விதை மற்றும் நெய் சேர்த்து இறக்கவும்.