Home சைவம் ருசியான பிரெட் கொத்து ரெசிபி இப்படி ஒரு தடவை செய்து கொடுத்துப் பாருங்கள்! மிச்சம்...

ருசியான பிரெட் கொத்து ரெசிபி இப்படி ஒரு தடவை செய்து கொடுத்துப் பாருங்கள்! மிச்சம் வைக்காமல் முழுவதையும் சாப்பிட்டு முடிப்பார்கள்!

பிரட் வைத்து நாம் நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு ரசிச்சு ருசித்து இருப்போம். உதாரணமா பிரட் ஆம்லெட், பிரெட் அல்வா, பிரட் பஜ்ஜி , பிரட் வெஜ் ரோல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் பிரெட்டை வச்சு செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா அது எல்லாமே ஸ்னாக்ஸ் மாதிரி நம்ம செஞ்சி சாப்பிட்டிருப்போம்.

-விளம்பரம்-

ஆனா இப்ப நம்ம செய்ய போற இந்த பிரட் கொத்து நம்ம காலைல பிரேக் பாஸ்ட்டா கூட சாப்பிடலாம். அந்த அளவுக்கு வயிறு நிரம்ப கூடிய ஒரு அற்புதமான ரெசிபி தான் இந்த பிரட் கொத்து. ஒரு சிலர் காலைல ரொம்ப லைட்டா சாப்பிடணும் அப்படின்னு நினைப்பாங்க ஆனா அதுலையே வயிறு நிரம்பணும் அப்படின்னு நினைப்பாங்க அப்படி நினைக்கிறவங்க பேன்கேக், ஜூஸ்,ஆம்லெட் சாப்பிடுவாங்க..

அவங்களுக்கு ஒரு வித்தியாசமான காலை உணவு தான் இந்த பிரட் கொத்து காரம் இனிப்பு எல்லாம் கலந்து ஒரு அருமையான காலை உணவா இந்த பிரட் கொத்து இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க எப்பவுமே இட்லி தோசை பொங்கல் செய்றதுக்கு பதிலா இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு கொடுத்தா நமக்கும் ரொம்ப சமையல் மேல ஆர்வம் வரும். அந்த மாதிரி ஒரு அருமையான பிரட் கொத்து எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

Print
5 from 1 vote

பிரட் கொத்து | Bread Kothu Recipe In Tamil

ஒரு வித்தியாசமான காலை உணவு தான் இந்த பிரட் கொத்து காரம் இனிப்பு எல்லாம் கலந்து ஒரு அருமையான காலைஉணவா இந்த பிரட் கொத்து இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்கஎப்பவுமே இட்லி தோசை பொங்கல் செய்றதுக்கு பதிலா இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு கொடுத்தாநமக்கும் ரொம்ப சமையல் மேல ஆர்வம் வரும். அந்த மாதிரி ஒரு அருமையான பிரட் கொத்து எப்படிசெய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamil nadu
Keyword: Bread Kothu
Yield: 4
Calories: 456kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 பிரட்
  • 2 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் பிரட் துண்டுகளை பொடி பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி பிரட் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
  • இப்பொழுது அதே கடாயில் கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிந்த உடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்
  • வெங்காயம் வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மிளகுத்தூள் மற்றும் உப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.நன்றாக கிளறிய பின்பு இரண்டு முட்டைகளை ஊற்றி நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது பொரித்து வைத்த பிரட் துண்டுகளை முட்டை கலவையுடன் சேர்த்து கிளறி பிறகு ஒரு பெரிய டம்ளரை எடுத்து அதனை வைத்து பிரட் துண்டுகளும் வெங்காயம் தக்காளி முட்டை கலவையும் ஒன்றாக கலக்கும்வரை கொத்து பரோட்டா போன்று கொத்திக் கொள்ளவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் ஒரு அருமையான காலை உணவிற்கு சாப்பிடக்கூடிய தயார் நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

Nutrition

Serving: 300g | Calories: 456kcal | Carbohydrates: 21g | Cholesterol: 12mg | Sodium: 324mg | Potassium: 442mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் பிரெட் அல்வா வீட்டிலேயே சில நிமிஷத்தில் சுலபமாக இப்படி செய்து சாப்பிடலாம்!