காரசாரமான கத்தரிக்காய் மிளகு குழம்பு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சாதத்திற்கு பக்காவாக இருக்கும்!

- Advertisement -

ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் என்ன சமைப்பது என்று தெரியாமல் இருப்பீர்களா? அப்படியானால் ஒரு நாள் மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அவற்றைக் கொண்டு கத்திரிக்காய் மிளகு குழம்பு செய்யுங்கள். வழக்கமாக நாம் செய்கின்ற கத்திரிக்காய் வறுவல், கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் ப்ரை என்று இல்லாமல், இப்படி காரசாரமான முறையில் மிளகு கத்திரிக்காய் குழம்பை ஒரு முறை செய்து பாருங்க. இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் கத்திரிக்காய் முதன்மை இடத்தை பெற்றுள்ளது என்று கூறும் அளவிற்கு, பல நன்மைகளை நமக்கு தருகிறது. கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி. அது பிடிக்கவே பிடிக்காது என்பார்கள். ஆனால், ஒரு முறை இந்த கத்தரிக்காய் மிளகு குழம்போடு சேர்த்து கத்தரிக்காயை சுவைத்துவிட்டால் மீண்டும் ‘கொண்டா, கொண்டா’ என கேட்பார்கள்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு கத்தரிக்காய் அவர்களை கட்டிப்போட்டுவிடும். முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது கத்தரிக்காய்கள். வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதனால் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல வகையான நன்மைகளை தரும் கத்திரிக்காயை வைத்து சூப்பரான கத்திரிக்காய் மிளகு குழம்பு வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

கத்தரிக்காய் மிளகு குழம்பு | Brinjal Pepper Curry Recipe In Tamil

ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் என்ன சமைப்பது என்று தெரியாமல் இருப்பீர்களா? அப்படியானால் ஒரு நாள் மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அவற்றைக் கொண்டு கத்திரிக்காய் மிளகு குழம்பு செய்யுங்கள். வழக்கமாக நாம் செய்கின்ற கத்திரிக்காய் வறுவல், கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் ப்ரை என்று இல்லாமல், இப்படி காரசாரமான முறையில் மிளகு கத்திரிக்காய் குழம்பை ஒரு முறை செய்து பாருங்க. இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் கத்திரிக்காய் முதன்மை இடத்தை பெற்றுள்ளது என்று கூறும் அளவிற்கு, பல நன்மைகளை நமக்கு தருகிறது. கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி. அது பிடிக்கவே பிடிக்காது என்பார்கள். ஆனால், ஒரு முறை இந்த கத்தரிக்காய் மிளகு குழம்போடு சேர்த்து கத்தரிக்காயை சுவைத்துவிட்டால் மீண்டும் ‘கொண்டா, கொண்டா’ என கேட்பார்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Brinjal Pepper Curry
Yield: 4 People
Calories: 24kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 வாணலி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 5 கத்தரிக்காய்
  • 4 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 வர‌ மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1/4 கப் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் கத்தரிக்காயை தண்ணீரில் நன்கு அலசி நான்காக கீறி‌ வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு, மிளகு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அரைத்த மிளகு விழுது சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து கெட்டியானதும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான கத்திரிக்காய் மிளகு குழம்பு தயார். இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 24kcal | Carbohydrates: 5.7g | Protein: 8g | Fat: 2.4g | Sodium: 4mg | Potassium: 230mg | Vitamin A: 27IU | Vitamin C: 6.2mg | Calcium: 7mg | Iron: 2.24mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை கத்திரிக்காய் லாங்கினால் இந்த மாதிரி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க!