Home சைவம் இட்லி தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் தக்காளி சப்ஜி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

இட்லி தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் தக்காளி சப்ஜி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும். எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்து சமைப்பது உண்டு.

-விளம்பரம்-

அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்ஃ புல்கா உடன், இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜ்ஜியை ஒரு முறை இட்லி, தோசை,சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டு தான் பாருங்க,அருமையாக இருக்கும்.முன்பெல்லாம் டிபன் என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூரி போன்றவை இருக்கும்.

அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னி தான் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ் வகைகள் வீட்டிலேயே செய்து தருகிறோம். அந்த வகையில் இப்போது கத்திரிக்காய் தக்காளி சப்ஜி வைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

கத்திரிக்காய் தக்காளி சப்ஜி | Brinjal Tomato Sabji In Tamil

உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும்இருக்கும்ஃ புல்கா உடன், இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜி சேர்த்து சாப்பிட்டால் மிகவும்அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம். இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜ்ஜியை ஒரு முறை இட்லி, தோசை,சப்பாத்திக்குசைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டு தான் பாருங்க,அருமையாக இருக்கும்.முன்பெல்லாம் டிபன்என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூரி போன்றவை இருக்கும். அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னிதான் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ்வகைகள் வீட்டிலேயே செய்து தருகிறோம். அந்த வகையில் இப்போது கத்திரிக்காய் தக்காளி சப்ஜிவைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Prep Time4 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Brinjal Tomato Sabji
Yield: 4
Calories: 24kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 கத்திரிக்காய் நறுக்கியது
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1/4 டீஸ்பூன் எண்ணெய்
  • 4 பற்கள் பூண்டு
  • 4 தக்காளி நறுக்கியது
  • 1 கப் தண்ணீர்
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன்  சீரகப் பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • கொத்தமல்லி சிறிது

செய்முறை

  • முதலில் சுத்திரிக்காயை வெட்டி, நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  
    பின்னர்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
     
  • பின்பு அதில் தக்காளி, கத்திரிக்காய், தண்ணீர், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறி, மூடி வைத்து 8-10 நிமிடம் நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
  • இறுதியில்மூடியைத் திறந்து, நன்கு சப்ஜி போன்று மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கி இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறினால், கத்திரிக்காய் தக்காளி சப்ஜி ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 24kcal | Carbohydrates: 5.7g | Protein: 0.1g | Potassium: 229mg | Fiber: 3.4g | Vitamin C: 2.2mg