ருசியான அவரைக்காய் க்ரீன் கறி இப்படி செய்து பாருங்கள்! அவரைக்காயை பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

- Advertisement -

சாதாரணமாக நம்முடைய வீட்டில் செய்யும் அவரைக்காய் பொரியல் போல இந்த ரெசிப்பி இருக்காது. கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து, வித்தியாசமான சுவையில் செய்யப்போகும் அவரைக்காய் கிரீன் கறி ரெசிபியை எப்படி செய்வது. தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

-விளம்பரம்-

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கைப் பக்குவமும் இருக்கும். அவ்வாறு ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சைவ உணவையே அசைவ ருசியில் சமைத்து சாப்பிடுவார்கள்.

- Advertisement -

வித்தியாசமான முறையில் இவ்வாறு அவரைக்காய் செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

அவரைக்காய் க்ரீன் கறி | Broad Beans Green Curry In Tamil

சாதாரணமாக நம்முடைய வீட்டில்செய்யும் அவரைக்காய் பொரியல் போல இந்த ரெசிப்பி இருக்காது. கொஞ்சம் வித்தியாசமான முறையில்மசாலா பொருட்களை சேர்த்து, வித்தியாசமான சுவையில் செய்யப்போகும் அவரைக்காய் கிரீன்கறி ரெசிபியை எப்படி செய்வது. தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். வித்தியாசமான முறையில் இவ்வாறு அவரைக்காய் க்ரீன் கறி செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறைசுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனைஎப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Broad beans Curry
Yield: 4
Calories: 76kcal

Equipment

  • 1 கடாய்

செய்முறை

  • முதலில் 100 கிராம் அளவு அவரைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.அவரைக்காயில் இருக்கும் நாரை நீக்கி விட்டு, சுத்தமாக கழுவிவிட்டு ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள்.அதில் நறுக்கி, கழுவி தயாராக இருக்கும் அவரை காய்களை சேர்த்து, அவரைக்காய் பாதி மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, பாதி அளவு வேகும்வரை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அவரைக்காய் குழைந்துபோய் வேகக் கூடாது. கட்டாயம்பாதி அளவு தான் காய் வெந்திருக்க வேண்டும். அப்போதுதான் பொரியல் சுவையாக இருக்கும்.(அவரக்காய் வேகும்போதே நீங்கள் ஊற்றிய தண்ணீர் அனைத்தும் சுண்டி விடும்.)
  • அடுத்த படியாக ஒரு சிறிய மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள்.அதில் பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு பல் தோல் உரித்தது– 2, சிறிய பின்ச் இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு,
  • இந்த பொருட்களை எல்லாம் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும். இப்போது அவரைக்காய் க்ரீன் கரி தாளிக்க செல்வோம்.

Nutrition

Serving: 100g | Calories: 76kcal | Carbohydrates: 8.2g | Protein: 6.1g | Fat: 3g | Fiber: 6g

இதையும் படியுங்கள் : ருசியான அவரைக்காய் குருமா, ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க!