சிக்கன் சுவைக்கு நம்ம விதவிதமான வகைகளில் உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போ சுட்ட சிக்கன் குழம்பு செய்து சாப்பிட இருக்கோம். இந்த சுட்ட சிக்கன் குழம்பு நம்ம எப்பொழுதும் செய்யப் போற சிக்கன் குழம்பை விட இந்த சுட்ட சிக்கன் குழம்பு இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சுவையா இருக்க போகுது.
இதுல போடப் போற பொருட்களை எல்லாம் நாம் கொஞ்சம் நெருப்புல வாட்டி செய்ய போறோம். சிக்கன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. சிக்கனில் புரதசத்து உடையதால் எந்த பிரச்சனையும் வரப்போகிறது கிடையாது. சிக்கன் உணவுகள் வரிசையில் சிக்கன் பிரியாணி, சிக்கன் சுக்கா, சிக்கன் கிரேவி, சிக்கன் சூப், சிக்கன் பெப்பர் ப்ரை, சிக்கன் வறுவல் அப்படின்னு நிறைய செய்திருப்போம்.
அந்த வரிசையில் இப்போ நம்ம சுட்ட சிக்கன் குழம்பு எப்படி செய்வது? அப்படின்னு பார்க்க இருக்கோம். இந்த குழம்பு ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் கிடையாது. இந்த கிரேவிய ரொம்ப சுலபமாவே நம்ம சீக்கிரமாவே செய்து முடிச்சிடலாம். சரி வாங்க இந்த சுட்ட சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் அப்படிங்கறது பார்க்கலாம்.
சுட்ட சிக்கன் குழம்பு | Burnt Chicken Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ சிக்கன்
- 1 கப் தயிர்
- 3 பச்சைமிளகாய்
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- ஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கைப்பிடி கொத்தமல்லி
மசாலா பொடிக்கு
- 100 கிராம் மல்லி விதைகள்
- 5 காய்ந்த மிளகாய்
- 2 ஸ்பூன் வெள்ளை எள்
- 1 துண்டு பட்டை
- 4 கிராம்பு
- 1 அன்னாசிபூ
- 1 ஜாதிபத்ரி
- 2 பிரியாணி இலை
- 4 ஏலக்காய்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- கடல் பாசி சிறிதளவு
சுட்ட மசாலாக்கு
- 1 ஓடு நீக்கிய தேங்காய் சில்லுகள்
- 3 வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
செய்முறை
- முதலில் சிக்கனை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,கொத்தமல்லி சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதனோடு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிசறி விட வேண்டும்.
- பின் இந்த சிக்கன் கலவையில் தயிர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி ஊற வைக்கவும். அடுப்பில்ஒரு கடாயை வைத்து அதில் கொத்தமல்லி விதைகள், வெள்ளை எள்ளு, பட்டை , கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாதிப்பத்திரி, அன்னாசிப்பூ, கடல்பாசி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் வறுத்து எடுத்து மசாலா பொருட்களை ஆற வைத்து ஒருமிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- பின் ஓடு நீக்கிய தேங்காய், வெங்காயம் இவற்றை நெருப்பில் நன்றாக சுட்டு எடுக்கவும்.தேங்காய், வெங்காயம் நன்றாக நெருப்பில் வாட்டி சுட்டு வந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- இந்த விழுது நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பிறகு பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை சிக்கனில் சேர்த்து நன்றாக கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்ட கலந்து நன்றாக மூடி போட்டு வேக வைக்கவும். மசாலாக்கள் சுருள வெந்தவுடன் சூடாக எடுத்து சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு பரிமாறினால் அருமையான சுவையில் சுட்ட சிக்கன் குழம்பு காரசாரமாக தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான சிக்கன் உப்பு கறி ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!