வெயிலுக்கு இதமா பட்டர்ஸ்காட்ச் ஐஸ் கிரீம் 10 நிமிஷத்துல இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சாப்பிட்டாலும் ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கோடை வெயிலக்கு இதமாக வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

ஆனால் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டு விற்கப்படும் பல ஐஸ்கிரீம் வகைகளால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம். இதை தவிர்க்க ஆரோக்கியமான முறையில் நீங்களே வீட்டில் ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்த திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும். இதை சுலபமாக வெறும் பத்து நிமிடத்தில் செய்திட முடியும். இந்த பதிவில் சுவையான பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Print
2 from 1 vote

பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்|Butter Scotch Icecream

ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சாப்பிட்டாலும் ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. ஆனால் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டு விற்கப்படும் பல ஐஸ்கிரீம் வகைகளால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம். இதை தவிர்க்க ஆரோக்கியமான முறையில் நீங்களே வீட்டில் ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: icecream
Yield: 4 People
Calories: 560kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 பெரிய தட்டு

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஃப்ரெஷ் கிரம்
  • 2 டீஸ்பூன் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர்
  • 1 கப் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ்
  • 1/2 கப் சர்க்கரை
  • முந்திரி

செய்முறை

  • ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலக்கவும். உருகி பிறகு தேன் கலர் ஆனதும் இதில் சிறிதளவு நறுக்கிய முந்திரி சேர்த்து கலக்கவும்.
  • பின்னர் ஒரு தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி ஆறவிடவும். ஆறின பிறகு மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கலந்து கொதிக்க விடவும். பிறகு இதை ஆற வைக்கவும்.
  • அடுத்த குளிர்ந்த பாத்திரத்தில் குளிர்ந்த ஃப்ரஷ் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நன்றாக அடிக்கவும்.
  • அடுத்தது சர்க்கரை பவுடர், செய்து வைத்த கஸ்டர்டு, கேரமல் பவுடர், பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அடுத்த சின்ன பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும்.
  • பரிமாறும் முன் 5 நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும். அருமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 560kcal | Carbohydrates: 38g | Protein: 6g | Fat: 56g | Cholesterol: 95mg | Sodium: 210mg | Potassium: 120mg | Fiber: 7g | Sugar: 27g | Calcium: 143mg