Home ஸ்நாக்ஸ் மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டைகோஸ் போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!

மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டைகோஸ் போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!

தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் முட்டைக்கோஸ் போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இந்தியா முழுவதும் பலவிதமான போண்டா வகைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மைசூர் போண்டா, உளுந்து போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, காய்கறி போண்டா, கீரை போண்டா, மற்றும் முட்டை போண்டா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

-விளம்பரம்-

இதை ரெஸ்டாரன்ட்களில் மட்டுமின்றி சிறு சிறு கடைகளிலும் கூட மாலை நேரங்களில் சுட சுட பொரித்தெடுத்து உணவுப் பிரியர்களுக்கு பரிமாறுவதை தினம் தோறும் நாம் காணலாம். இதற்கு அந்த அளவிற்கு மிகவும் வரவேற்பு உண்டு.  போண்டா பெரும்பாலும் தேங்காய் சட்னியுடனோ அல்லது புதினா சட்னியுடனோ தான் பரிமாறபடுகிறது. என்ன தான் தென்னிந்தியாவில் உதயமாகி இருந்தாலும் இவை வட இந்தியாவிலும் மிகவும் பிரபலம்.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. இவை மராட்டிய மொழியில் Vada என்று அழைக்கப்படுகிறது. மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய முட்டைக்கோஸ் போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
4.50 from 2 votes

முட்டைகோஸ் போண்டா | Cabbage Bonda Recipe In Tamil

மாலை நேர சிற்றுண்டிகளில் முட்டைக்கோஸ் போண்டாவிற்கு என ஒரு தனிஇடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இந்தியா முழுவதும் பலவிதமான போண்டா வகைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மைசூர் போண்டா, உளுந்து போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, காய்கறி போண்டா, கீரை போண்டா, மற்றும் முட்டை போண்டா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Cabbage Bonda
Yield: 5
Calories: 40kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் முட்டைகோஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை,கொத்தமல்லி சிறிதளவு
  • 200 கி கடலை மாவு
  • 200 கி அரிசி மாவு
  • ஸ்பூன் உப்பு
  • மிளகாய்த் தூள்
  • சோடா உப்பு
  • சீரகம்
  • பெருங்காய தூள்
  • எண்ணெய்

செய்முறை

  • முதலில் பொடியாக முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
     
  • கடலைமாவு, மற்றும் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு மற்றும் சீரகம், சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • கலந்த மாவில் முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கையில் எடுத்து உருட்டி போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
     
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டி சூடான எண்ணெய்  எடுத்துபோண்டா மாவில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

Nutrition

Serving: 100g | Calories: 40kcal | Carbohydrates: 9g | Protein: 1.1g | Fat: 0.1g | Sodium: 4mg | Potassium: 146mg | Fiber: 1.7g | Sugar: 4.2g