ரொம்பவே சுலபமான அதே சமயம் சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி, ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!

- Advertisement -

முட்டைகோஸ் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது முட்டைகோஸ் பொரியல் தான். முட்டைகோஸ்ல பொரியல் மட்டும் இல்லாம கூட்டு கூட வச்சு சாப்பிடுவாங்க ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி இந்த முட்டைக்கோஸ்ல நம்ம இன்னைக்கு என்ன பண்ண போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா முட்டைக்கோஸ் சட்னி. முட்டைக்கோஸ்ல சட்னி அரைக்கலாம் ரொம்பவே சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

இது ரொம்ப ரொம்ப நல்லது உங்ககிட்ட வெங்காயம் இல்லையா கொஞ்சமாதான் வெங்காயம் இருக்கு முட்டைகோஸ் இருக்கா அப்ப கொஞ்சமா வெங்காயத்தை சேர்த்துக்கிட்டு அது கூட நீங்க முட்டைக்கோசையும் சேர்த்து சட்னி  செய்தா சட்னி ரொம்பவே சுவையாவும் இருக்கும். அதிக அளவும் கிடைக்கும் அதேபோல சட்னி ரொம்ப ருசியாவும் இருக்கும். இந்த முட்டைகோஸ் சட்னி வச்சு நீங்க இட்லியோ இல்ல தோசையோ செய்து கொடுத்தீங்கன்னா நீங்க செய்து கொண்டு இருக்கும் போதே இட்லியும் தோசையும் காலி ஆகிக்கொண்டே இருக்கும்.

- Advertisement -

அந்த அளவுக்கு ரொம்ப சுவையா இருக்கு அதனால எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. காலை நேரத்தில் டிபன் இல்லைன்னா இரவு நேரத்துல டிபன் இதுல எதுக்கு நீங்க இந்த சட்னி செய்து கொடுத்தாலும் ரொம்பவே சுவையா இருக்கும் சாப்பிடுவதற்கு. இந்த சுவையான ரொம்ப ஈஸியான முட்டைகோஸ் சட்னி எல்லாருமே செய்து சாப்பிடலாம் நிறைய கால்சியம் இருக்கு அதனால அது உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமானது.

சுவையான இந்த முட்டைக்கோஸ் சட்னி எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான முட்டைகோஸ் சட்னியை சின்னவங்க முதல் பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க  இட்லி தோசை செய்ய செய்ய அது சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க இந்த சட்னியோட சுவை அவங்கள சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த முட்டைகோஸ் சட்னி. இந்த சுவையான முட்டைகோஸ் சட்னியை எப்படி ரொம்பவே சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

முட்டைகோஸ் சட்னி | Cabbage Chutney Recipe In Tamil

சுவையானஇந்த முட்டைக்கோஸ் சட்னி எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான முட்டைகோஸ் சட்னியை சின்னவங்க முதல் பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க  இட்லிதோசை செய்ய செய்ய அது சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க இந்த சட்னியோட சுவை அவங்கள சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த முட்டைகோஸ் சட்னி. இந்த சுவையான முட்டைகோஸ் சட்னியை எப்படி ரொம்பவே சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, chutney
Cuisine: tamil nadu
Keyword: Cabbage Chutney
Yield: 4
Calories: 238kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1/2 கப் முட்டைகோஸ்
 • 10 சின்ன வெங்காயம்
 • 4 காய்ந்த மிளகாய்
 • 3 பல் பூண்டு
 • 1 ஸ்பூன் உளுந்து
 • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
 • 1 கப் தேங்காய் துருவல்
 • புளி திராட்சைஅளவு
 • 1 ஸ்பூன் கடுகு
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • எண்ணெய் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 • முதலில் முட்டைகோஸை சுத்தம்செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
 • பின்பு அதில் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
 • பிறகு அதில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
 • பிறகு அதில் கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைக்கவும். சட்னிக்கு வறுத்த பொருள்கள்   ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அவைகளை சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • முட்டைகோஸை சட்னி யோடு சேர்த்து மிக்ஸியில் கொடுத்து  வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
   
 • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியோடு கலந்து இட்லி, தோசைக்கு பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Saturated Fat: 1.6g | Sodium: 113mg | Potassium: 381mg | Fiber: 3g

-விளம்பரம்-