சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான முட்டை கோஸ் கூட்டு ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

எல்லா விஷேச வீடுகளையும் சாம்பார் சாதம் இருந்தா கண்டிப்பா முட்டைக்கோஸ் பொரியல் இருக்கும். கல்யாண வீடு காதுகுத்து சடங்கு அன்னதானம் அப்படின்னு எல்லாத்துலயுமே சாம்பார் சாதம் போட்டாங்க அப்படின்னா கண்டிப்பா அது கூட அப்பளமும் முட்டைக்கோஸ் பொரியலும் இருக்கும். அந்த முட்டைக்கோஸ் பொரியல் சாப்பிடுவதற்கு ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். நம்ம என்னதான் வீட்ல ட்ரை பண்ணாலும் ஒரு சில நேரத்துல அது கரெக்டா வராது.

-விளம்பரம்-

அதனால வேற மாதிரி முட்டைகோஸ் பொரியல் செஞ்சு பெயில் ஆகி இருப்பாங்க. ஆனாலும் அதே மாதிரி முட்டைகோஸ் பொரியல் செய்வது விட்டுட்டு ஒரு தடவை தேங்கா மஞ்சள் சீரகம் எல்லாம் அரைச்சு ஊத்தி சூப்பரான டேஸ்ட்ல ஒரு முட்டைகோஸ் கூட்டு வைத்து சாப்பிட்டு பாருங்க. அந்த முட்டைகோஸ் கூட்டுக்கு கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் தோற்றுப் போயிடும் அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

அந்த முட்டைக்கோஸ் கூட்டு கார குழம்புக்கு சைடிஷா வைத்து சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும் அது மட்டும் இல்லாம அந்த முட்டைக்கோஸ் கூட்டையே வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அட்டகாசமா இருக்கும். முட்டைக்கோஸ் கூட கடலை பருப்பும் சேர்த்து வைக்கிறதால நல்லா கெட்டியா சூப்பரான டேஸ்ட்ல நமக்கு கிடைக்கும். உங்க வீட்டு குழந்தைகளுக்கு இதை சும்மா வெறும் வாயிலேயே சாப்பிடுவதற்கு கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான முட்டைக்கோஸ் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

முட்டை கோஸ் கூட்டு | Cabbage Kootu Recipe In Tamil

முட்டைக்கோஸ் கூட்டு கார குழம்புக்கு சைடிஷா வைத்து சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும் அது மட்டும்இல்லாம அந்த முட்டைக்கோஸ் கூட்டையே வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட்நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அட்டகாசமா இருக்கும். முட்டைக்கோஸ் கூட கடலைபருப்பும் சேர்த்து வைக்கிறதால நல்லா கெட்டியா சூப்பரான டேஸ்ட்ல நமக்கு கிடைக்கும்.உங்க வீட்டு குழந்தைகளுக்கு இதை சும்மா வெறும் வாயிலேயே சாப்பிடுவதற்கு கொடுக்கலாம்விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான முட்டைக்கோஸ் கூட்டு எப்படி செய்வதுஎன்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Cabbage Kootu
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 சிறிய முட்டைகோஸ்
  • 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய்துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கசகசா
  • 3 டீஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டைக்கோஸைசிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில்  போட்டுக்கொள்ளவும். அதனுடன் கடலை பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சோம்பு, கசகசா மஞ்சள் தூள் அனைத்தும்சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • இப்போது வேக வைத்துள்ள முட்டைக்கோஸூடன் இந்த மிளகாய் சேர்த்து குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  • பத்து நிமிடங்கள் நன்றாக வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 245g | Cholesterol: 1mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU

இதையும் படியுங்கள் : காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து பாருங்க!