இந்த மாலை நேர சிற்றுண்டிகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதன்மையான இடம் பிடித்தவை சில உணவுகள் இருக்கு அப்படி பார்த்தா வடை, பக்கோடா, சம்ஸா , பஜ்ஜி சிப்ஸ் இந்த மாதிரி நிறைய உணவுகள் வந்து மாலை நேர சிற்றுண்டியில முதலிடம் கிடைக்கும். அப்படி இன்னிக்கு ஒரு சுவையான வித்தியாசமான பக்கோடா எப்படி செய்வது என்று தெரிந்து இருக்கும் முட்டைகோஸ் பகோடா ரொம்ப சுவையா இருக்கும்.
இந்த முட்டைகோஸில் கூட்டு , பொரியல், சாம்பார் இப்படி பல உணவுகள் செய்றாங்க. இந்த முட்டைகோஸில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கும். அதனால இந்த முட்டைகோஸை நல்லா யூஸ் பண்ணி சூப்பரான சுவையான ஒரு பக்கோடா செய்தா எப்படி இருக்கும். அது அந்த பக்கோடா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஈவினிங் ஒரு டீயோட காபி கூட சாப்பிடும் போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்க முடியும்.
இந்த முட்டைகோஸ் பக்கோடா நல்ல மொறு மொறு என்று செய்தால் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த சுவையான முட்டைகௌஸ் பக்கோடா ரொம்பவே சுலபமா செய்துவிடலாம். அப்படி இந்த சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருளை வைத்து குறைந்த நேரத்தில் டக்குனு பண்ணிடலாம்.
இப்போ வீட்டுக்கு யாராவது விருந்தாளி வராங்க அப்படின்னா என்ன செய்வது என்று தெரியவில்லையா? உங்ககிட்ட கடலை மாவு, வெங்காயம் இருக்கு முட்டைகோஸ் கூட இருக்கு அப்படின்னா டக்குனு எல்லாத்தையும் கட் பண்ணி அதுல சேர்த்து ஒரு உருண்டையா புடிச்சு புடிச்சு எடுத்து பொரித்து வந்த விருந்தாளிகளுக்கு கொடுத்தால். எல்லாரும் இது என்ன ரொம்ப சுவையா இருக்கு இது என்ன பக்கோடா அப்படின்னு தெரியாமல் முழிப்பாங்க ரொம்பவும் டேஸ்டா இருக்குனு உங்கள பாராட்டிட்டு போவாங்க சரி வாங்க எப்படி இந்த முட்டைகோஸ் பகோடா செய்யலாம்னு பார்க்கலாம்.
முட்டைகோஸ் பகோடா | Cabbage Pakoda Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- 1/2 கப் அரிசி மாவு
- 1 கப் முட்டைகோஸ்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன் கரமசாலா
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் முட்டைகோஸை சுத்தம் செய்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்துநன்றாக கலந்து விட வேண்டும்.
- பிறகு கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ் சேர்த்து நன்றாக அனைத்தையும் கலந்து விட வேண்டும்.
- பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பக்கோடாவிற்கு தேவையான அளவு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து பக்கோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாக்கள் போல் எண்ணெயில் போடவும்.
- பக்கோடா திருப்பிப் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டைகோஸ்பக்கோடா தயார்.