பத்தே நிமிஷத்துல காய்ச்சலை விரட்டும் ஆரோக்கியமான & ருசியான கேரட் இஞ்சி சூப் ரெடி!

- Advertisement -

கோடைமழை தொடங்கிவிட்டது , அங்கங்கே காய்ச்சல்,இருமல் என்று பரவும் நேரம். இந்நிலையில் உடலில் எதிர்ப்புசக்தி அதிகாரிக்கு உணவை உட்கொள்ளவது அவைசியமாகும். கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சூப் செய்து பருகுவதை உடலுக்கு நன்மை தரும். கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
4 from 1 vote

கேரட் இஞ்சி சூப் | Carrot Ginger Soup Recipe In Tamil

கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Course: Soup
Cuisine: tamilnadu
Keyword: Carrot Ginger Juice
Yield: 4
Calories: 71kcal

Equipment

 • 1 பவுள்

தேவையான பொருட்கள்

 • 6 கேரட்
 • 1 வெங்காயம்
 • கொத்தமல்லி சிறிது
 • 1 துண்டு இஞ்சி
 • 1 ஸ்பூன் வெண்ணை
 • 1 ஸ்பூன் சோள மாவு
 • கப் பால்
 • உப்பு தேவைகேற்ப
 • மிளகு தூள் தேவைகேற்ப

செய்முறை

 • வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும்.
   
 • சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும்.
 • இந்த‌க் கலவையை மூடியால்மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 100ml | Calories: 71kcal | Carbohydrates: 14g | Protein: 3.1g | Fat: 0.2g | Sodium: 47.8mg | Potassium: 144.4mg | Fiber: 3.8g | Calcium: 128.2mg | Iron: 1mg
- Advertisement -