தித்திக்கும் சுவையில் கேரட் பூசணி கீர் இப்படி சுலபமாக வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

 கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான கீர் ஆகும்.

-விளம்பரம்-

கீர் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் கீர் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கேரட்ட உடன் பூசணிக்காயும் சேர்த்து கீர் செய்யலாம். குழந்தைகள் பூசணிக்காய் சாப்பிட அடம் பிடித்தால் அவர்களுக்கு இது மாதிரியான சுவையான கீர் செய்து கொடுக்கலாம்.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கேரட் பூசணி கீர் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கேரட் பூசணி கீர் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சுவையான கேரட் பூசணி கீர் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும்.

Print
5 from 1 vote

கேரட் பூசணி கீர் | Carrot Pumpkin Kheer Recipe In Tamil

கீர்ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல்என்பதால், கேரட் கீர் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கேரட்ட உடன் பூசணிக்காயும் சேர்த்து கீர் செய்யலாம். குழந்தைகள் பூசணிக்காய் சாப்பிட அடம் பிடித்தால் அவர்களுக்கு இது மாதிரியான சுவையான கீர் செய்து கொடுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: mumbai
Keyword: Carrot Pumpkin Kheer R
Yield: 4
Calories: 187kcal

Equipment

 • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

 • 100 கிராம் கேரட்
 • 100 கிராம் மஞ்சள் பூசணி
 • 5 பாதாம்
 • 5 முந்திரி
 • 1 கப் நாட்டுசர்க்கரை
 • ஏலக்காய்ப்பொடி சிறிது
 • 1/2 லிட்டர் பால்

செய்முறை

 • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி நன்கு காய்ச்சி ஆற விடவும். பின் காரட், பூசணி ஆகிய இரண்டையும் துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரை குக்கரில் விட்டு வேகவிடவும்.
   
 • இவை ஆறியபின் ஒரு மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் முந்திரி, பாதாம் இரண்டையும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்த பின்பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • பின் அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பால், நாம் அரைத்த விழுது மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடவும். பால் நன்கு கொதித்ததும் அதில் சிறிது ஏலக்காய்ப் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் சூடாக்கி இறக்கவும்.
   
 • அவ்வளவுதான் சுவையான கேரட் பூசணிக்காய் கீர் தயார். இதனை பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 187kcal | Carbohydrates: 31.9g | Protein: 1.3g | Sodium: 4mg | Potassium: 499mg | Fiber: 2.3g | Calcium: 0.5mg