காலை டிபனுக்கு மொறு மொறுனு கேரட் வடை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

கேரட் நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு காய். இந்த கேரட் சாப்பிடுவது நம்ம கண்ணுக்கு ரொம்பவே நல்லது கண்ணு மட்டும் இல்லாம நம்ம ஸ்கின்னுக்கு ஒரு பளபளப்பு தன்மையை கொடுக்கக் கூடியது தான் இந்த கேரட் வாரத்துக்கு மூணு தடவை கேரட் ஜூஸ் குடிக்கிறதால நம்மளோட ஸ்கின் ரொம்ப பளபளப்பா இயற்கையான முறையில் அழகா மாறிடும்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட கேரட் நம்ம ஜூஸ் மட்டும்தான் போட்டு குடிக்கணுமா அப்படின்னு கேட்டா இல்ல கேரட் வச்சு செய்யக்கூடிய எல்லாமே நம்ம உடம்புக்கு நல்லது தான்.

-விளம்பரம்-

கேரட் வச்சு நம்ம கேரட் பொரியல் கேரட் சாம்பார் கேரட் அல்வா கேரட் ஜூஸ் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா அதுலா நமக்கு ரொம்பவே போர் அடிச்சு போயிருக்கும் அதனால கேரட் வச்சு ஏதாவது டிஃபரண்டா செஞ்சா நல்லா இருக்குமே அப்படின்னு யோசிக்கிறீங்களா அப்ப உங்களுக்கு தான் இந்த கேரட் வடை.

- Advertisement -

வடை அப்படின்னாலே சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் எல்லாம் நம்ம வடைய கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனா இப்போ எல்லாம் நம்ம வீட்டிலேயே வடை செஞ்சு சாப்பிட்டு இருக்கோம் அப்படி பல வடைகள் நம்ம செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கேரட் வடை கொஞ்சம் புதுசாவும் டேஸ்ட் ரொம்ப அருமையாக இருக்கும்.

கேரட் பொரியல் கேரட் ஜூஸ் சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி கேரட் வச்சு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கேரட் வடை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க வீட்டிலேயே நம்ம என்ன பலகாரமா இருந்தாலும் அத ஆரோக்கியமான முறையில செஞ்சு கொடுத்தா உடம்புக்கு நல்லது தான் இப்ப வாங்க இந்த அருமையான டேஸ்டான கேரட் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
2 from 1 vote

கேரட் வடை | Carrot Vadai Recipe In Tamil

கேரட் வச்சு நம்ம கேரட் பொரியல் கேரட் சாம்பார் கேரட் அல்வா கேரட் ஜூஸ் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா அதுலா நமக்கு ரொம்பவே போர் அடிச்சு போயிருக்கும் அதனால கேரட் வச்சு ஏதாவது டிஃபரண்டா செஞ்சா நல்லா இருக்குமே அப்படின்னு யோசிக்கிறீங்களா அப்ப உங்களுக்கு தான் இந்த கேரட் வடை. கேரட் பொரியல் கேரட் ஜூஸ் சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி கேரட் வச்சு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கேரட் வடை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க வீட்டிலேயே நம்ம என்ன பலகாரமா இருந்தாலும் அத ஆரோக்கியமான முறையில செஞ்சு கொடுத்தா உடம்புக்கு நல்லது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Carrot Vadai
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 பெரிய கேரட்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1/4 கப் பொட்டுக் கடலை
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெங்காயம் பற்றி மிளகாய் கொத்தமல்லி இலை கருவேப்பிலை அனைத்தையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மூன்று கேரட்களையும் நன்றாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  
    ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்
  • சிறிதளவு தண்ணீர் தெளித்து அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள கேரட் கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வடை மாதிரி தட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக வைத்து பொன் நிறமான பிறகு எடுத்தால் சுவையான கேரட் வடை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 1mg

இதையும் படியுங்கள் : சுவையான தஹி பப்டி சாட் இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

-விளம்பரம்-