முட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக முட்டைகளை வித விதமான முறையில் சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை. இந்த காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றியோ, அல்லது மற்ற சாதத்திர்க்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம். இவை வெறுமனே மாலை நேர சிற்றுண்டியாக செய்து உண்பதற்கும் மிகவும் உகந்தது.
இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான கிராமத்து முட்டை மசாலா இப்படி செய்து பாருங்க!
நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். இதை நாம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்தை தரும் முட்டை மற்றும் மிளகை கொண்டு செய்வதால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது. அதனால் நம் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது இதை ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். இந்த பதிவில் சுவையான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை |Cauliflower Egg Pepper Fry Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 3 முட்டை
- 1 கப் காலிஃபிளவர்
- 2 டீஸ்பூன் மிளகாயத்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- உப்பு தேவையானஅளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெந்நீரில் காலிஃப்ளவரை மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியவுடன் காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைத்து வதக்கவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும்.
- பின்பு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காலிஃப்ளவர் எக் பெப்பர் ஃப்ரை ரெடி. சப்பாத்தி, சாதம், நான், பரோட்டா வுடன் சூப்பராக இருக்கும்.