வெறும் 10 நிமிஷத்துல சுயைான கொண்டைக்கடலை புதினா சாதம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கொண்டைக்கடலை புதினா சாதத்தை மிக மிக சுலபமாக இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொண்டைக்கடலை புதினாக் கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

கொண்டைகடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும். வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

- Advertisement -

பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் கொண்டைக்கடலை , புதினாவை சேர்த்து இப்படி கொண்டைக்கடலை புதினா சாதம், ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. . குழந்தைகளுக்கு மதியம் உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொண்டைக்கடலை புதினா சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த சாதம் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Print
No ratings yet

கொண்டைக்கடலை புதினா சாதம் | Channa Mint Rice

பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் கொண்டைக்கடலை,புதினாவை சேர்த்து இப்படி கொண்டைக்கடலை புதினா சாதம், ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால்அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. . குழந்தைகளுக்கு மதியம்உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. கொண்டைக்கடலை புதினா சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதியஉணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Channa Mint Rice
Yield: 4
Calories: 207kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கழுவி ஊறவைத்த அரிசி
  • 1 கப் ஊறவைத்த கொண்டைக்கடலை
  • 1 கப் எல்லா காய்கறிகளும் நறுக்கியது
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 வெங்காயம்
  • 1 கைப்பிடி நறுக்கிய புதினா இலைகள்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • நான்ஸ்டிக்பாத்திரத்தில் எண்ணெயைச் சுடாக்கி வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய எல்லா காய்கறிகள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பத்து நிமிடம் ஊறவைத்த  அரிசியைசேர்க்கவும், 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். உப்பு சரியாக இருக்கிறதா என்று ருசி பார்க்கவும்.
  • பின் பாத்திரத்தை ஆவி வெளியில் வராமல் இறுக்கமாக மூடி வேகா வேகவைக்கவும்
  • அரிசி அரை வேக்காட்டில் ஊறவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். நன்றாக கிளறி இடவும்.
  • பின்னர்  புதினாஇலை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும்
  • நன்குஅரிசி காய்கறி வெந்ததும் இறக்கிவிடவும் , இது முழுமையான உணவாகும்.
    அருமையான கொண்டைக்கடலை புதினா சாதம் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 37.7g | Protein: 4.8g | Fiber: 4.1g | Calcium: 115mg