சன்னா-பாலக் கிரேவி செய்வது இவ்வளவு ஈஸியா? சத்தான உணவை, சுவையாக செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க!

- Advertisement -

கொண்டைக்கடலை, பாலக் கீரையை வைத்து சுவையாக சன்னா-பாலக் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றித்தான் ரெசிபி. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு பன்னீரோடு சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

சப்பாத்திக்கு, நாண், ஃபுல்கா, பரோட்டாவிற்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் நாம் இட்லி தோசைக்கு கூட தொட்டு சாப்பிடலாம் சுவையாக தான் இருக்கும். கொண்டைக்கடலை, பாலக் கீரை மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு கறி உணவாகும். வட இந்தியாவில், சன்னா மசாலாவை ‘சோலே மசாலா’ என்று அழைக்கப்படுகிறது. சன்னா மற்றும் சோலே ஆகிய இரண்டு சொற்களும் கொண்டைக்கடலையைக் குறிக்கின்றன. 

- Advertisement -

வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில் இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.மற்றும்  பாலக் கீரை பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது. இந்த சன்னா-பாலக் கிரேவி அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும் வாருங்கள் இந்த சுவையான சன்னா-பாலக் கிரேவி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

சன்னா பாலக் கிரேவி | Channa Palak Gravy Recipe In Tamil

வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில் இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.மற்றும்  பாலக் கீரை பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர்மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.இந்த சன்னா-பாலக் கிரேவி அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சிநல்லபடியாக இருக்கும் வாருங்கள் இந்த சுவையான சன்னா-பாலக் கிரேவி எப்படி செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Channa Palak Gravy
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கொண்டைக்கடலை
  • 1 பாலக்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி தனியா தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரக தூள்
  • கசூரி மேத்தி சிறிது
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • கீரையில் சிறிது தண்ணீர் ஊற்றி 2-3 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்,
  • பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.
  • இப்போது வேக வைத்துள்ள சன்னாவை சேர்த்து கிளறவும்.இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். உப்பு, காரம் சன்னாவில் இறங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை விழுது சேர்த்து ஒரு கொதி விடவும். உப்பு,காரம் சரிப்பார்க்கவும்.
  • பின்னர் ககுரி மேத்தியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும், சத்தான, சுவையான சன்னா-பாலக் கிரேவி தயார் பரிமாறும் போது சிறிது வெண்ணெய் சேர்த்து பரிமாறலாம். இது பூரி மற்றும் சப்பாத்திக்கு நல்வ காம்பினேஷன்.
  • விரும்பினால் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம். பாலக் கீரையை அரைக்காமல், பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம், அப்படி செய்யும் போது, சிறிது சன்னாவை மிக்சியில் அரைத்து சேர்த் கிரேவி திக்காக வரும்.

Nutrition

Serving: 100g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : சப்பாத்தியுடன் சாப்பிட காரசாரமான ருசியில் சென்னா சாட் மசாலா இப்படி செய்து பாருங்க!